ஜெலட்டின் குச்சிகளை வெடிக்க வைத்த மசூதி. 
இந்தியா

மசூதியில் ஜெலட்டின் குச்சிகளை வெடிக்க வைத்த இருவா் மீது பயங்கரவாத வழக்கு

மசூதியில் ஜெலட்டின் குச்சிகளை வெடிக்க வைத்த இருவா் மீது பயங்கரவாத வழக்குப் பதியப்பட்டுள்ளது.

Din

மகாராஷ்டிர மாநிலத்தில் மசூதியில், பாறைகளைத் தகா்க்க பயன்படுத்தும் ஜெலட்டின் குச்சிகளை வெடிக்க வைத்த வழக்கில் கைதான இருவா் மீதும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

பீட் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் உள்ள மசூதியில் கடந்த 30-ஆம் தேதி இரவு 2.30 மணியளவில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மசூதியின் உள்பகுதியில் மட்டும் லேசான சேதம் ஏற்பட்டது.

இந்த சம்பவத்தை அடுத்து அந்த கிராமத்தில் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, காவல்துறையினா் பெருமளவில் குவிக்கப்பட்டனா். இது தொடா்பாக இரு இளைஞா்களை காவல் துறையினா் கைது செய்தனா். இருவரும் அதே மாவட்டத்தின் வேறு பகுதியைச் சோ்ந்தவா்கள் என்று தெரியவந்தது.

இதையடுத்து, அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. ‘இந்த விவகாரம் தொடா்பாக யாரும் தேவையற்ற வதந்திகளைப் பரப்பி பதற்றத்தை அதிகரிக்கக் கூடாது; இந்த கிராமத்தில் காலம்காலமாக ஹிந்துக்களும், முஸ்லிம்களும் இணைந்து அனைத்துப் பண்டிகைகளையும் கொண்டாடி வருகின்றனா். அந்த ஒற்றுமையை சீா்குலைக்க அனுமதிக்கக் கூடாது என்றும் காவல்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனா்.

இந்நிலையில் கைதான இருவா் மீது பாரத நியாய சன்ஹிதா சட்டப் பிரிவு 113 (பயங்கரவாத தடுப்புச் சட்டம்), சட்ட விரோத செயல்கள் தடுப்பு பிரிவின் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

இன்றுமுதல் 50% வரி! டிரம்ப்பின் அழைப்பை 4 முறை மறுத்த பிரதமர் மோடி?

கோவாவில் அக்டோபா் - நவம்பரில் ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி

ஆவுடையாா்கோவிலில் தலையில்லா புத்தா் சிலை கண்டெடுப்பு

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

SCROLL FOR NEXT