கோப்புப் படம்
இந்தியா

16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: பாட்மின்டன் பயிற்சியாளர் கைது!

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த பாட்மின்டன் பயிற்சியாளர் கைது.

DIN

கர்நாடகத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பாட்மின்டன் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டார்.

பெங்களூரைச் சேர்ந்த 16 வயது சிறுமி இரு ஆண்டுகளாக ஹுலிமாவு பகுதியில் பாட்மின்டன் பயிற்சி எடுத்து வருகிறார். இந்த நிலையில், அங்கு பயிற்சியாளராக இருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாலாஜி சுரேஷ் (26) அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

சிறுமிக்கு கூடுதல் பயிற்சி தருவதாகக் கூறி பலமுறை பாலியல் சீண்டலில் ஈடுபட்டு அவரை வன்கொடுமை செய்த பாலாஜி சுரேஷ், இதனை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

மேலும், பாலாஜி அந்தச் சிறுமியை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

கடந்த மார்ச் 30 அன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிந்த நிலையில் தனது பாட்டியின் வீட்டிற்குச் சென்ற சிறுமி, பாலாஜி வற்புறுத்தியதால் பாட்டியின் போனில் இருந்து தனது அந்தரங்க புகைப்படங்களை அனுப்பியுள்ளார்.

அந்த புகைப்படங்களை போனில் பார்த்தபின் சிறுமியிடம் இதுபற்றி விசாரித்த அவரது பாட்டி, சிறுமியின் பெற்றோருக்கு உடனடியாக இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் பாலாஜி சுரேஷை காவல்துறையினர் கைது செய்தனர் அவர்மீது போக்ஸோ வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விசாரணையில், தான் அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததை பாலாஜி ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும், அவரின் மொபைல் போனில் வேறு சில பெண்களின் அந்தரங்க புகைப்படங்களும் இருந்ததைத் தொடர்ந்து அவரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராகுல் காந்தி நாளை காலை செய்தியாளர்களுடன் சிறப்புச் சந்திப்பு: என்ன சொல்லப் போகிறார்?

சமதா இஷ்டி யாகத்துக்கான கலசங்கள் ஒப்படைப்பு

பனித்துளி... பிரியங்கா மோகன்!

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

SCROLL FOR NEXT