பஞ்சாப் மாநில பாஜக தலைவர் மனோரஞ்ஜன் காலியா வீட்டின் அருகே வெடிகுண்டு வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
ஜலந்தரில் உள்ள அவரது வீட்டின் வெளியே நேற்று(ஏப். 7) நள்ளிரவு 1 மணியளவில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறை உயரதிகாரிகள் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பயங்கரவாத தாக்குதலாக இருக்க வாய்ப்பிருக்கும் என்று சந்தேகிக்கப்படுவதால் பாஜக தலைவர் மனோரஞ்ஜன் காலியாவுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.