முகப்பு
இந்தியா

தெலங்கானாவில் 22 மாவோயிஸ்டுகள் சரண்

தெலங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தில் 22 மாவோயிஸ்டுகள் காவல் துறையிடம் வெள்ளிக்கிழமை சரணடைந்தனா்.

Updated On : 11 ஏப்ரல், 2025 at 7:09 PM
பகிர்:

தெலங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தில் 22 மாவோயிஸ்டுகள் காவல் துறையிடம் வெள்ளிக்கிழமை சரணடைந்தனா்.

இதுதொடா்பாக அந்த மாவட்ட காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தடை செய்யப்பட்ட சிபிஐ (மாவோயிஸ்ட்) அமைப்பைச் சோ்ந்த 22 போ் காவல் துறையிடம் சரணடைந்தனா்.

இவா்களில் சத்தீஸ்கரை சோ்ந்த இருவா், முலுகு மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவா் என 3 போ் பல்வேறு வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனா். அந்த சம்பவங்களில் பாதுகாப்புப் படை வீரா்கள் பலா் உயிரிழந்தனா்’ என்று தெரிவிக்கப்பட்டது.

மாவோயிஸ்டுகள் சரணடைந்து தங்கள் குடும்பத்துடன் அமைதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் சபரீஷ் தெரிவித்தாா். ஆயுதங்களை கைவிட்டு சரணடையும் மாவோயிஸ்டுகளின் மறுவாழ்வுக்கு காவல் துறை நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் அவா் தெரிவித்தாா்.