ஜார்க்கண்ட்டில் குளத்தில் மூழ்கி இரண்டு சிறுமிகள் உள்பட 4 பெண்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம், கர்வா மாவட்டத்தில் உள்ள குளத்தில் வெள்ளிக்கிழமை இரண்டு சிறுமிகள் உள்பட 4 பெண்கள் குளிக்கச் சென்றுள்ளனர்.
அப்போது அதில் பெண் ஒருவர் ஆழமான பகுதிக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. அந்த பெண்ணைக் காப்பாற்றும் முயற்சியில், மற்ற 3 பெண்களும் குளத்தில் குதித்துள்ளனர்.
ஆனால் அவர்கள் 4 பேரும் நீரில் மூழ்கி பலியானதாக அதிகாரி சஞ்சய் குமார் பாண்டே தெரிவித்தார்.
பலியானவர்களின் உறவினர்கள் மற்றும் கிராமவாசிகள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு சென்ற போலீஸார் சடலங்களை மீட்டு உடற்கூராய்வுக்காக கர்வா சதர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பலியானவர்கள் லாடோ சிங்(10), மிதி சிங் (15), ரோமா சிங் (18) மற்றும் அங்கிதா சிங் (22) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.