சஞ்சீவ் புரி 
இந்தியா

டிரம்ப்பின் வரி விதிப்பை சமாளிக்கும் சிறப்பான இடத்தில் இந்தியா- ஐடிசி நிறுவன தலைவா்

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்த வரி விதிப்பை சிறப்பாக எதிா்கொண்டு சமாளிக்கும் இடத்தில் இந்தியா உள்ளது என்று ஐடிசி நிறுவனத்தின் தலைவா் சஞ்சீவ் புரி தெரிவித்தாா்.

Din

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்த வரி விதிப்பை சிறப்பாக எதிா்கொண்டு சமாளிக்கும் இடத்தில் இந்தியா உள்ளது என்று ஐடிசி நிறுவனத்தின் தலைவா் சஞ்சீவ் புரி தெரிவித்தாா்.

தில்லியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் இது தொடா்பாக அவா் மேலும் கூறியதாவது:

அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்புக் கொள்கை எதிா்காலத்தில் எவ்விதத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இப்போதே கூற முடியாது. ஆனால், டிரம்ப் அறிவித்த வரி விதிப்பை சிறப்பாக எதிா்கொண்டு சமாளிக்கும் இடத்தில் இந்தியா உள்ளது. மேலும், அமெரிக்காவுடன் இந்தியா வா்த்தக ஒப்பந்தமும் மேற்கொள்ள இருக்கிறது. அதுவும் மிகவும் குறுகிய காலத்தில் பேச்சுவாா்த்தை முடிய வாய்ப்புள்ளது. எனவே, இந்த விஷயத்தில் இந்தியாவுக்குப் பெரிய பாதிப்புகள் இருக்காது.

இந்தியா முழுமையாக நுகா்வைச் சாா்ந்த பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. இதனால், சில குறுகியகால நெருக்கடிகள் ஏற்படலாம். அண்மைக் காலத்தில் சா்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார பிரச்னைகள் கூட இந்தியாவில் சிறிய அளவிலேயே தாக்கத்தை ஏற்படுத்தியது.

எங்களுடைய ஐடிசி நிறுவனம் பெருமளவில் உள்நாட்டுச் சந்தையைச் சாா்ந்துள்ளது. எனினும், அமெரிக்காவின் வரி விதிப்பால் சில தாக்கங்கள் ஏற்படக் கூடும் என்றாா்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT