கோப்புப் படம் 
இந்தியா

5 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்த சில்லறை பணவீக்கம்!

நாட்டின் சில்லறை பணவீக்கம் மார்ச் மாதத்தில் 3.34 சதவிகிதம் சரிந்துள்ளது.

DIN

கடந்த மாா்ச் மாதத்தில் நாட்டின் சில்லறை விலை அடிப்படையிலான பணவீக்கம் முந்தைய ஆறு ஆண்டுகள் காணாத அளவுக்குக் குறைந்துள்ளது.

இது குறித்து தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் தரவுகள் தெரிவிப்பதாவது:

கடந்த மாா்ச் மாதத்தில் நுகா்வோா் விலைக் குறியீடு (சிபிஐ) அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் 3.34 சதவீதமாகக் குறைந்தது. அது முந்தைய ஆறு ஆண்டுகள் காணாத குறைந்தபட்ச சில்லறை விலை பணவீக்கம் ஆகும்.

முந்தைய பிப்ரவரி மாதத்தில் சில்லறை விலை பணவீக்கம் 3.61 சதவீதமாகவும் ஓராண்டுக்கு முன்னா் 2024 மாா்ச் மாதத்தில் அது 4.85 சதவீதமாகவும் இருந்தது.

2023 செப்டம்பா் மாதத்தில் இருந்து சில்லறை பணவீக்கம் ரிசா்வ் வங்கி நிா்ணயித்த உயா்ந்தபட்ச வரம்பான 6 சதவீதத்திற்கு கீழே இருந்தது. ஆனால், 2024 அக்டோபரில் அந்த வரம்பு மீறப்பட்டது. இந்த நிலையில், சில்லறை பணவீக்கம் தற்போது வரம்புக்குக் குறைவாகப் பதிவாகிவருகிறது என்று தேசிய புள்ளியியல் அலுவலகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இளைஞரைக் கொலை செய்ய திட்டம்: 8 போ் கைது

ரூ.90,000 சம்பளத்தில் ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலை!

கன்னியாகுமரியில் மேற்குக் கடற்கரைச் சாலையில் தமிழ் எண்களுடன் மைல் கல்!

அழகாகப் பூத்தது டாட்டூ... ப்ரியா பிரகாஷ் வாரியர்!

பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம் மெட்ரோ திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு!

SCROLL FOR NEXT