இந்திய சுதந்திரப் போராட்ட வீராங்கனையை ஜப்பான் தூதர் சந்தித்துள்ளார். 
இந்தியா

இந்திய சுதந்திரப் போராட்ட வீராங்கனையுடன் ஜப்பான் தூதர் சந்திப்பு!

பிகாரில் சுதந்திரப் போராட்ட வீராங்கனையை ஜப்பான் நாட்டுத் தூதர் சந்தித்துள்ளதைப் பற்றி...

DIN

இந்தியாவிற்கு வருகைத் தந்துள்ள ஜப்பான் நாட்டுத் தூதர் பிகார் மாநிலத்திலுள்ள சுதந்திரப் போராட்ட வீராங்கனையை நேரில் சந்தித்துள்ளார்.

இந்தியாவிற்கு அரசு முறைப் பயணமாக வந்துள்ள ஜப்பான் நாட்டுத் தூதர் கெய்ச்சி ஒனொ, நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் ராணுவத்தில் ஜான்சி ராணி படைப்பிரிவில் பணியாற்றிய வீராங்கனை ஆஷா சஹாய் செளதரி (வயது 97) என்பவரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதுகுறித்து, தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஜப்பான் தூதர் கெய்ச்சி ஓனொ, ’’ஜப்பானில் பிறந்து நேதாஜியின் வழியில் இந்தியாவின் சுதந்திரத்துக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஜான்சி ராணி படைப்பிரிவைச் சேர்ந்த திருமதி ஆஷா சஹாய் செளதரியைச் சந்திக்கும் பாக்கியம் தனக்குக் கிடைத்தது’’ எனக் கூறியுள்ளார்.

மேலும், அவரது தாய்நாட்டின் மீதான பக்தியை தான் மிகவும் பாராட்டுவதாகவும் அவர் மேலும் தொடர்ந்து ஆரோக்கியமாக இருக்க வாழ்த்துகிறேன் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த 1928-ம் ஆண்டு ஜப்பான் நாட்டில் பிறந்த ஆஷாவின் தந்தை ஆனந்த் மோஹன் சஹாய், நேதாஜியின் தலைமையில் இயங்கிய ஆசாத் ஹிந்து அரசின் அமைச்சராகப் பணியாற்றினார்.

தனது 15 ஆம் வயதில் நேதாஜியை சந்தித்த ஆஷா 1945-ம் ஆண்டு அவரது ராணுவத்தின் ஜான்சி படைப்பிரிவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, பாங்காக் நகரத்தில் ராணுவப் பயிற்சி பெற்ற அவர் நட்பு நாடுகளிடம் ஜப்பான் சரணடைந்தபோது சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், 1946-ம் ஆண்டு விடுதலையாகி அவர் தனது தந்தையிடம் சேர்க்கப்பட்டார்.

இதையும் படிக்க:வகுப்பறையில் சாணம் பூசிய கல்லூரி முதல்வர்: பழிவாங்கிய மாணவர் சங்கத் தலைவர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் பெய்த கனமழையால் விமான சேவை பாதிப்பு!

ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் ரத்த வெள்ளத்தில் வாலிபர் சடலம்! கொலையா? தற்கொலையா?

எழுத்தாளர் கி.ரா. பிறந்தநாள்: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

புதிய உச்சத்தில் ரூ.83,000-ஐ நெருங்கிய தங்கம்! எகிறும் வெள்ளி விலை!

பரபரப்பான சூழலில் அமித் ஷாவை இன்று சந்திக்கும் இபிஎஸ்!

SCROLL FOR NEXT