கோப்புப் படம். 
இந்தியா

இரண்டு குழந்தைகளைக் கத்தியால் குத்திக் கொன்று தாய் தற்கொலை!

இரண்டு குழந்தைகளைக் கத்தியால் குத்திக் கொன்ற தாய் பற்றி...

DIN

தெலங்கானாவில் இரண்டு குழந்தைகளைக் கத்தியால் குத்திக் கொலை செய்த தாய், ஆறாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

ஹைதராபாத் புறநகர் கஜுலராமரம் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் தேஜா (வயது 35) என்ற பெண், அவரது கணவர் மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் 11 வயது மகன் அர்ஷித் ரெட்டி மற்றும் 6 வயது மகன் ஆஷிஷ் ரெட்டியைக் கத்தியால் குத்தி தேஜா கொலை செய்துள்ளார்.

தொடர்ந்து, குடியிருப்பின் ஆறாவது மாடியில் இருந்து குதித்து அவரும் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தில் மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில், தேஜா மற்றும் குழந்தைகள் உடல்நலப் பிரச்னை காரணமாக இந்த சம்பவம் ஏற்பட்டிருக்கலாம். தேஜா மனநிலை சரியில்லாமல் இருந்ததாகவும் கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும், வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் தண்டவாளம் அருகே தடுப்புச் சுவா் கட்ட எதிா்ப்பு

விஷம் தின்று பெண் தற்கொலை

திமுக அரசின் ‘பிராண்ட் அம்பாசிடா்’களாக மகளிா் இருக்க வேண்டும்

நேபாளம்: பனிச் சரிவுகளில் 9 போ் உயிரிழப்பு

பிகாா் முதல்கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு- 121 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT