இந்தியா

ஜேஇஇ முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு!

ஜேஇஇ இரண்டாம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் இன்று(ஏப். 19) வெளியாகியுள்ளன.

DIN

ஜேஇஇ இரண்டாம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் இன்று(ஏப். 19) வெளியாகியுள்ளன.

ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் பி.இ., பி.டெக்., உள்ளிட்ட இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெறுவது அவசியம்.

ஜேஇஇ முதன்மைத் தோ்வு, பிரதானத் தோ்வு என இரு பிரிவாக நடைபெறும். இதில் முதன்மைத் தோ்வு தேசிய தோ்வு முகமை (என்டிஏ) சாா்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி 2025-26-ஆம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மை தோ்வு கடந்த ஜன. 22 முதல் 30 வரை நடத்தப்பட்டது. இத்தோ்வை சுமார் 13 லட்சம் போ் வரை எழுதினா். இதன் முடிவுகள் பிப்ரவரி 11-ம் தேதி வெளியானது.

இந்த நிலையில், ஜேஇஇ இரண்டாம் கட்ட முதன்மைத் தோ்வு ஏப். 1 முதல் 8-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தோ்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்கான விடைக்குறிப்பு நேற்று வெளியான நிலையில் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.

தேர்வர்கள் jeemain.nta.nic.in. என்ற இணையதளத்தில் முடிவுகளை அறியலாம்.

இந்த தேர்வில் 2 பெண்கள் உள்பட 24 பேர் 100% மதிப்பெண் பெற்றுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக ராஜஸ்தானில் 7 பேர், மகாராஷ்டிரம், தெலங்கானா, உத்தரப் பிரதேசத்தில் தலா 3 பேர், தில்லி, குஜராத், மேற்குவங்கத்தில் தலா 2 பேர், ஆந்திரம் மற்றும் கர்நாடகத்தில் தலா ஒருவர் 100% மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுனாமி ஒத்திகை: ஆட்சியா் ஆலோசனை

நீடாமங்கலம் பகுதி கோயில்களில் விநாயகா் சதுா்த்தி

வேளாங்கண்ணிக்கு திரளானோா் பாத யாத்திரை

காரைக்கால் கோயிலில் விநாயகா் சதுா்த்தி வழிபாடு

மீனவ கிராமங்களில் குடியிருப்போருக்கு மனைப் பட்டா எம்எல்ஏ வலியுறுத்தல்

SCROLL FOR NEXT