ஈஸ்டர் திருநாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் திருநாளையொட்டி, மக்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும் வாழ்த்து தெரிவித்து, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் வாழ்த்துப் பதிவில் கூறியிருப்பதாவது, அனைவருக்கும் ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் மகிழ்ச்சியான ஈஸ்டர் வாழ்த்துக்கள். உலகம் முழுவதும் ஜூபிலி ஆண்டு மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுவதால் இந்த ஈஸ்டர் திருநாள் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.
இந்த புனிதமான தருணம் ஒவ்வொருவரிடமும் நம்பிக்கை, புதுப்பித்தல், இரக்கத்தை ஊக்குவிக்கட்டும். எல்லா இடங்களிலும் மகிழ்ச்சியும் நல்லிணக்கமும் நிலவட்டும் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.