PTI
இந்தியா

பஹல்காம் தாக்குதல்: பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி!

பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு நிவாரண நிதியுதவி அறிவித்து அஸ்ஸாம் முதல்வர் உத்தரவிட்டார்.

DIN

பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு நிவாரண நிதியுதவி அறிவித்து அஸ்ஸாம் முதல்வர் உத்தரவிட்டார்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான 26 பேரின் குடும்பங்களுக்கும் ரூ.5 லட்சம் நிவாரண நிதியுதவி அளிக்கப்படும் என்று அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா அறிவித்தார்.

ஜம்மு-காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரமான பஹல்காமில் பயங்கரவாதிகளால் செவ்வாய்க்கிழமை 26 சுற்றுலாப் பயணிகள் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டனர்.  இந்தத் தாக்குதல், உலகளவில் கடும் கண்டனங்களைக் கிளப்பியுள்ளது.

பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தான் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் போராட்டங்கள் நடத்தி வரும்நிலையில், பாகிஸ்தான் மீது இந்தியாவும், இந்தியா மீது பாகிஸ்தானும் சில நடவடிக்கைகளை அறிவித்து வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செப்.6, 7-இல் 108 அவசர ஊா்தி பணியாளா்கள் தோ்வு

கருப்பு நிறத்தில் காவிரிக் குடிநீா்: பொதுமக்கள் வேதனை

கொடைக்கானலில் உருளைக்கிழங்கு, பீன்ஸ் செடிகளில் மஞ்சள் நோய் தாக்குதல்

விநாயகா் கோயிலில் வருடாபிஷேகம்

மனுவை திரும்பப் பெற்றதால் வழக்கு தள்ளுபடி

SCROLL FOR NEXT