கஸ்தூரி ரங்கன் ENS
இந்தியா

இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் காலமானார்

இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் (83) வயது மூப்பு காரணமாக காலமானார்.

DIN

இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் காலமானார்.

இஸ்ரோவின் முன்னாள் தலைவரும் தேசிய கல்விக் கொள்கையின் தலைவருமான கிருஷ்ணசாமி கஸ்தூரிரங்கன் (84) வயது மூப்பு காரணமாக வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 25) காலமானார்.

கேரள மாநிலம் எர்ணாக்குளத்தில் கிருஷ்ணசாமி கஸ்தூரிரங்கன் 1940, அக்டோபர் 24 ஆம் தேதியில் பிறந்தார்.

இவர், முன்னாள் இஸ்ரோ தலைவர் டாக்டர் உ.ரா.ராவ்-க்கு அடுத்ததாக 1994 முதல் 2003 காலகட்டத்தில் இஸ்ரோவின் தலைவராகப் பதவி வகித்தார். இவரது பொறுப்புக் காலக்கட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் செயல்படுத்தப்பட்டன.

மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்த கஸ்தூரிரங்கன், பத்மஸ்ரீ (1982), பத்ம பூஷண் (1992), பத்ம விபூஷண் (2000) உள்பட பல்வேறு விருதுகளையும் பெற்றவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா மீண்டும் முதலிடம்!

சத்தீஸ்கரில் ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட பெண் நக்சல் சரண்!

5,400 பேருக்கு வேலைவாய்ப்பு... 4 புதிய தொழிற்பேட்டைகள்: முதல்வர் திறந்து வைத்தார்!

15 புதிய பட்டுப் புடவைகளை அறிமுகப்படுத்தும் ஆரெம்கேவி!

10 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

SCROLL FOR NEXT