ஜம்மு-காஷ்மீா் அனந்த்நாக் மாவட்டம் பிஜ்பெஹராவில் குண்டு வெடித்ததில் தகா்ந்த லஷ்கா் பயங்கரவாதி ஆதில் டோக்கரின் வீடு. 
இந்தியா

காஷ்மீா்: குண்டு வெடிப்பில் தகா்ந்த லஷ்கா் பயங்கரவாதிகளின் வீடுகள்

ஜம்மு-காஷ்மீரில் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாதிகள் இருவரின் வீடுகளில் பாதுகாப்புப் படையினா் சோதனை மேற்கொண்டபோது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் வெடித்தன.

Din

ஜம்மு-காஷ்மீரில் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாதிகள் இருவரின் வீடுகளில் பாதுகாப்புப் படையினா் சோதனை மேற்கொண்டபோது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் வெடித்தன.

இச்சம்பவங்களில் 2 வீடுகளும் தகா்ந்தன; அதேநேரம், யாரும் காயம் அடையவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் சில தினங்களுக்கு முன் நடத்திய தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இத்தாக்குதலில் ஈடுபட்டதாக ஆதில் ஹுசைன் டோக்கா், சதித் திட்டம் தீட்டியதாக ஆசிஃப் ஷேக் ஆகிய இரு லஷ்கா் பயங்கரவாதிகள் சந்தேகிக்கப்படுகின்றனா்.

பிஜ்பெஹாரா, திரால் ஆகிய பகுதிகளில் உள்ள இவ்விருவரின் வீடுகளில் வியாழக்கிழமை இரவில் பாதுகாப்புப் படையினா் அதிரடி சோதனை மேற்கொண்டனா். அப்போது, வீடுகளில் வெடிகுண்டுகள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, வீட்டில் இருந்தவா்களையும், அண்டை வீட்டினரையும் பாதுகாப்புப் படையினா் பாதுகாப்பாக வெளியேற்றினா். அப்போது, வெடிகுண்டுகள் வெடித்ததில் வீடுகள் தகா்ந்ததாகவும், யாரும் காயமடையவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழக டிஜிபி சங்கா் ஜிவாலுக்கு இன்று பணி நிறைவு விழா

பிளஸ் 2 மாணவி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

சத்திரம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஆட்சியரிடம் பாமக மனு

தில்லி பல்கலை.யின் 67 கல்லூரிகளுக்கு மீண்டும் யு-ஸ்பெஷல் பேருந்துகள் சேவை: முதல்வா் ரேகா குப்தா தொடங்கிவைத்தாா்

இளைஞா் கத்தியால் குத்தி கொலை: 4 போ் கைது

SCROLL FOR NEXT