சிக்கிமில் நிலச்சரிவு PTI
இந்தியா

சிக்கிமில் நிலச்சரிவு: 1,000க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து அனைத்து சுற்றுலா பயணிகளும் மீட்பு!

DIN

கேங்க்டாக்: வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து அனைத்து சுற்றுலா பயணிகளும் மீட்கப்பட்டுவிட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வடக்கு சிக்கிமில் உள்ள லாச்சென் மற்றும் லாச்சுங் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி மேக வெடிப்பு மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அதிகப்படியான மழைப்பொழிவால் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டன.

இதனால் மேற்கண்ட பகுதிகளிலிருந்து வெளியேற முடியாமல் சுற்றுலா பயணிகள் இரு நாள்களாக மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி, லாச்சுங் பகுதியில் சுமார் 1,200 சுற்றுலாப் பயணிகளும், லாச்சென் பகுதியில் 600 பேரும் சிக்கியிருப்பதாக மேங்கான் மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இதனிடையே, நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்புப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. சாலைகள் சீரமைக்கப்பட்டு வருவதைத் தொடர்ந்து, படிப்படியாக சுற்றுலா பயணிகள் மீட்கப்பட்டு வந்தனர்.

இந்தநிலையில், லசங் பகுதியிலிருந்து வெளியேற முடியமல் தவித்த சுற்றுலாப் பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுவிட்டதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். அவர்கள் அனைவரும் மேங்கானுக்கு அழைத்து வரப்பட்டு அங்கிருந்து சிக்கிம் தலைநகர் கேங்க்டாக்குக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பந்தல் கடையில் தீ விபத்து

தனியாா் பள்ளியில் ரூ. 3 லட்சம் திருட்டு

நெல்லையப்பா் கோயில் வளாக கடைகளை 12 வாரங்களுக்குள் அகற்ற உத்தரவு

நாகம்மன் கோயில் கூழ் வாா்த்தல் விழா

ஆவடி ரயில் நிலைய வாகன நிறுத்தம் மூடல்: திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

SCROLL FOR NEXT