பிரதமர் நரேந்திர மோடியின் ரஷிய பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜெர்மன் படைகள் மற்றும் சோவியத் யூனியனுக்கு இடையே 1940 - 45 களில் நடைபெற்ற இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியனிடம் ஜெர்மன் படைகள் சரணடைந்தன. இதனை கொண்டாடும் வகையில் ரஷியா வெற்றி நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது.
ரஷியாவில் வருகின்ற மே 9 ஆம் தேதி 80 ஆம் ஆண்டு வெற்றி விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக இந்தியா உள்பட நட்பு நாடுகளின் தலைவர்களுக்கு ரஷியா அழைப்பு விடுத்திருந்தது.
இந்த வெற்றி விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், ரஷிய வெற்றி நாள் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவில்லை என்று ரஷியாவின் அதிபர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி சார்பாக மத்திய அமைச்சர் ஒருவர் கலந்துகொள்ளவிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைசியாக, செளதி அரேபியாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாதியில் பயணத்தை முடித்துவிட்டு நாடு திரும்பியிருந்தார்.
தற்போது இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நிலவி வரும் சூழலில் ரஷியப் பயணத்தை மோடி தவிர்த்திருக்கலாம் எனத் தெரிவிகின்றது.
முன்னதாக ரஷியா - உக்ரைன் போர் தொடங்கிய பிறகு முதல்முறையாக கடந்தாண்டு ஜூலை மாதம் ரஷியாவுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டிருந்தார்.
அந்த பயணத்தின்போது, இந்தியாவுக்கு வருமாறு ரஷிய அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். அவரும் அழைப்பை ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.