மறைந்த ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இன்று மாலை இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது.
ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வரும், அந்த மாநிலத்தில் ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சியின் நிறுவனருமான சிபு சோரன் திங்கள்கிழமை காலமானாா்.
புது தில்லியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி மறைந்த அவரின் உடலுக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் நேற்று அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், சிபு சோரனின் உடல் நேற்று மாலை ராஞ்சிக்கு கொண்டு வரப்பட்டு, அவரது மோராபாடி வீட்டில் தலைவர்கள், குடும்ப உறுப்பினர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
மாநில பாஜக மூத்த தலைவரும், சிபு சோரனின் நெருங்கிய நண்பருமான சம்பயி சோரன் செவ்வாய்க்கிழமை காலை நேரில் அஞ்சலி செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, மாநில சட்டப்பேரவை வளாகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட சிபு சோரனின் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
பிற்பகலுக்கு மேல் அவரது சொந்த ஊரான ராம்கா் மாவட்டத்தின் நேம்ரா கிராமத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட அங்கு இறுதிச் சடங்குகள் செய்யப்படவுள்ளன.
முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும், 3 நாள்கள் மாநிலத்தில் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.