பிரதமர் நரேந்திர மோடியுடன் அதிபர் டொனால்ட் டிரம்ப்  
இந்தியா

அமெரிக்காவின் வரி விதிப்பு நியாயமற்றது: மத்திய அரசு

இந்தியாவுக்கு 50% வரி விதிக்கப்படும் என்ற அமெரிக்காவின் உத்தரவு நியாயமற்றது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

இந்திய இறக்குமதி பொருள்களுக்கு 50% வரி விதிக்கப்படும் என்ற அமெரிக்காவின் உத்தரவு நியாயமற்றது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் வரி உயர்வு குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சமீப நாள்களாக ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை அமெரிக்கா குறிவைப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, தனது தேச நலன்களை பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும், சந்தை காரணிகளை அடிப்படையாகக் கொண்டே இந்தியாவின் இறக்குமதி உள்ளதாக ஏற்கெனவே அமெரிக்காவுக்குத் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், 140 கோடி மக்களின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்துடன் இந்தியா செயல்படுவதாகவும் விளக்கமளித்துள்ளது.

வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அறிக்கை

மற்ற நாடுகளும் தங்கள் தேசிய விருப்பப்படி வர்த்தகத்தை மேற்கொள்ளும் நிலையில், இந்தியாவின் மீது 50% வரி விதிப்பு என்பது துரதிருஷ்டவசமானது என குறிப்பிட்டுள்ள வெளியுறவுத் துறை அமைச்சகம்,

அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கை நியாயமற்றது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம் என்றும், ரஷிய எண்ணெய் இறக்குமதி விவகாரத்தில் ஏற்கெனவே தங்கள் நிலைப்பாட்டை விளக்கிவிட்டோம் எனவும் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க | இந்தியாவுக்கு மேலும் 25%... மொத்தம் 50% வரி: டிரம்ப்

US president donald trump impose additional tariffs on india is extremely unfortunate unfair

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷப் பந்த்திடம் மன்னிப்பு கேட்ட கிறிஸ் வோக்ஸ்; எதற்காக?

பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி மீண்டும் அமெரிக்கா பயணம்! 2 மாதங்களில் 2வது முறை!

தீராத அனுபவங்கள்... மம்மூட்டி - 54!

வாக்காளர் பட்டியல் குளறுபடி என்ன? ராகுலிடம் தரவு கேட்கும் கர்நாடக தேர்தல் அதிகாரி

புதின் இந்தியா வருகை! டிரம்ப்புக்கு எதிராக இந்தியா - ரஷியா கூட்டு சேருமா?

SCROLL FOR NEXT