நரேந்திர மோடி - பெஞ்சமின் நெதன்யாகு கோப்புப் படம்
இந்தியா

இந்தியா - அமெரிக்கா பிரச்னை! பிரதமர் மோடிக்கு ஆலோசனை வழங்க நெதன்யாகு வருகை!

டிரம்ப்பின் வரிப் பிரச்னை குறித்து ஆலோசனை வழங்க இந்தியாவுக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வருகை

இணையதளச் செய்திப் பிரிவு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடனான பிரச்னை குறித்து ஆலோசனை வழங்க இந்தியாவுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வருகைதர இருப்பதாகக் கூறியுள்ளார்.

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது வரிவிதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா மீது 25 சதவிகித வரியை விதித்தார்.

இருப்பினும், இந்தியா தொடர்ந்து எண்ணெய் வாங்கியதால், மேலும் 25 சதவிகித வரியை விதித்ததுடன், இப்பிரச்னை முடிவடையும்வரையில் இந்தியாவுடன் எந்தவித வர்த்தக ஒப்பந்தமும் அமெரிக்கா மேற்கொள்ளக் கூடாது என்றும் உத்தரவிட்டார்.

இந்தியா - அமெரிக்கா இடையிலான இந்தப் பிரச்னை, உலக பொருளாதார நாடுகளிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இரு நாடுகளும் பிரச்னையை முடித்துக்கொள்ள வலியுறுத்தும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இந்தியாவுக்கு வருகைதர விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களுடன் நெதன்யாகு பேசுகையில், பிரதமர் மோடியும் அதிபர் டிரம்ப்பும் எனது நெருங்கிய மற்றும் உற்ற நண்பர்கள். டிரம்ப்பை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட ஆலோசனையும் வழங்குவேன் என்று தெரிவித்ததுடன், கூடிய விரைவில் இந்தியாவுக்கு வருகைதர இருப்பதாகவும் கூறினார்.

அவர் தொடர்ந்து பேசுகையில், இந்தியா - அமெரிக்கா உறவு, மிகவும் வலுவானது மற்றும் அதனைக் கருத்தில்கொண்டு இரு நாடுகளும் பிரச்னையைத் தீர்க்க வேண்டும்.

அதுதான் இரு நாடுகளுக்கும் நல்லது; இஸ்ரேலுக்கும் நல்லது என்று தெரிவித்தார்.

Netanyahu offers Modi private advice on how to deal with Trump

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கண் சிமிட்டலில்.... ஷாலினி சௌஹான்

கண்களால் கைது செய்... சுதா

சிறுமியை ஏமாற்றி தங்க நகைகள் கொள்ளை: 2 சிறுவா்கள் கைது

விழி அசையில்... ரூபினா திலாய்க்

'தேசியக் கல்விக் கொள்கையின் முக்கியத்துவத்தை இப்போதுதான் உணர்ந்திருக்கிறது திமுக அரசு'

SCROLL FOR NEXT