ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை! டிரம்ப்பை சந்திக்க அமெரிக்கா செல்கிறார் நெதன்யாகு!
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவுக்குச் செல்வது குறித்து...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்திக்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வாஷிங்டனுக்குச் செல்கிறார்.
ஈரானுடனான அணுசக்தி பேச்சுவார்த்தைகளை விரிவுப்படுத்துமாறு அதிபர் டிரம்ப்பை வலியுறுத்தும் நோக்கில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வரும் புதன்கிழமை (பிப். 11) அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் யுரேனியம் வளங்களை நிறுத்த வேண்டும், அதன் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் மற்றும் கிளர்ச்சிப்படைகளுடனான உறவுகளை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என இஸ்ரேல் நீண்ட காலமாகத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.
Advertisement
Advertisement
ஆனால், இதனை நிராகரித்து வரும் ஈரான் அரசு அணுசக்தி திட்டத்தில் சில வரம்புகளைக் கொண்டு வருவதற்கு மட்டுமே ஒப்புக்கொண்டுள்ளது. இதையடுத்து, ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் பல அதிரடி நடவடிக்கைகளுக்கு இஸ்ரேல் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றது.
இந்த நிலையில், ஈரான் அரசின் தலைவர்கள் சில முக்கிய விவகாரங்களில் அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு ஒப்புக்கொண்டுள்ளனர்.
கடந்த டிசம்பர் முதல் அரசுக்கு எதிராக நடைபெற்ற மாபெரும் போராட்டங்களைத் தொடர்ந்து ஈரான் அதன் கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளைக் கொண்டு வர முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Israeli PM Netanyahu is traveling to Washington to meet with Trump.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.