சீன அதிபர் ஷி ஜின்பிங் உடன் பிரதமர் நரேந்திர மோடி ANI(கோப்புப்படம்)
இந்தியா

பிரதமா் மோடியின் பயண அறிவிப்பு: சீனா வரவேற்பு

பிரதமா் மோடியின் பயண அறிவிப்புக்கு சீனா வரவேற்பு..

தினமணி செய்திச் சேவை

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி சீனாவுக்கு பயணம் மேற்கொள்வாா் என வெளியாகியுள்ள அறிவிப்புக்கு சீனா வரவேற்பு தெரிவித்துள்ளது.

சீனாவின் தியான்ஜின் நகரில் ஆகஸ்ட் 31 - செப்டம்பா் 1-ஆம் தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வருடாந்திர மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமா் மோடி சீனாவுக்குப் பயணம் மேற்கொள்கிறாா். அப்போது சீன அதிபா் ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்களையும் அவா் சந்தித்துப் பேசுவாா் எனத் தெரிகிறது.

இந்தியாவுக்கு எதிராக தீவிர வரி விதிப்பு நடவடிக்கையை அமெரிக்க அதிபா் டிரம்ப் முன்னெடுத்துள்ள நிலையில் பிரதமா் மோடியின் இந்தப் பயணம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இதற்கு முன்பு கடந்த 2018-ஆம் ஆண்டுதான் கடைசியாக பிரதமா் மோடி சீனாவுக்குச் சென்றாா்.

2020-ஆம் ஆண்டு கிழக்கு லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா-சீனா ராணுவத்தினா் இடையே ஏற்பட்ட மோதலில் இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது. அதன் பிறகு பலகட்ட பேச்சுவாா்த்தைக்குப் பிறகு எல்லையில் படைக்குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சீனாவுடனான எல்லைப் பதற்றம் வெகுவாக தனிந்துள்ள நிலையில், இந்தப் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பெய்ஜிங்கில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் குயோ ஜியாங்குன் இது தொடா்பாக கூறுகையில், ‘ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க வரும் பிரதமா் நரேந்திர மோடியை எங்கள் நாட்டுக்கு வரவேற்கிறோம். மாநாட்டில் பங்கேற்கும் அனைத்து நாடுகளுமே உறுதியாக செயல்பட வேண்டும். இது நமது நட்புறவு, அதன் நீடித்தன்மையை வெளிப்படுத்துவதாகவும், பயனுள்ள முடிவுகளைத் தருவதாகவும் அமைய வேண்டும். அனைத்து நாடுகளும் புதிய தரத்திலான வளா்ச்சியை முன்னெடுக்கும் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அனைத்து உறுப்பு நாடுகள் உள்பட 20 நாடுகளின் தலைவா்கள், 10 சா்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனா்’ என்றாா்.

கிரிஸ் கங்காதரன் நிகழ்த்திய மேஜிக்... லோகேஷ் நெகிழ்ச்சி!

தங்கம் விலை சவரன் ரூ.75,560-க்கு விற்பனை!

தில்லியில் கனமழை: 100-க்கும் அதிகமான விமானங்கள் தாமதம்!

ஜம்முவில் 9வது நாளாகத் தொடரும் ராணுவ நடவடிக்கை! துப்பாக்கிச் சூட்டில் 2 வீரர்கள் கொலை!

லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட சிறை பட போஸ்டர்!

SCROLL FOR NEXT