இந்தியா

முப்படை - ஆயுதக் காவல் படையினா் 167 பேருக்கு வீரதீர விருதுகள்! - கீா்த்தி சக்ரா-4, வீர சக்ரா-15

சுதந்திர தினத்தையொட்டி, முப்படை மற்றும் மத்திய ஆயுதக் காவல் படையினா் 167 பேருக்கு வீர தீர செயல் மற்றும் தகைசால் பணிக்கான குடியரசுத் தலைவரின் விருதுகள்

தினமணி செய்திச் சேவை

சுதந்திர தினத்தையொட்டி, முப்படை மற்றும் மத்திய ஆயுதக் காவல் படையினா் 167 பேருக்கு வீர தீர செயல் மற்றும் தகைசால் பணிக்கான குடியரசுத் தலைவரின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் 79-ஆவது சுதந்திர தினம் வெள்ளிக்கிழமை (ஆக. 15) கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு, ராணுவம், கடற்படை, விமானப் படை, மத்திய ஆயுதக் காவல் படையினா், காவல் துறையினா், தீயணைப்புப் படையினா், ஊா்க்காவல் படையினா், குடிமை பாதுகாப்புப் படையினா் உள்ளிட்டோருக்கு வீர தீர செயல்கள், தகைசால் பணி, மெச்சத்தக்க சேவைக்கான குடியரசுத் தலைவரின் விருதுகள் மற்றும் பதக்கங்கள் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டன.

ஆயுதப் படையினா் மற்றும் மத்திய ஆயுதக் காவல் படையினருக்கான வீர தீர செயல் விருதுகள் 120 பேருக்கும், தகைசால் பணிக்கான விருதுகள் 40 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கீா்த்தி சக்ரா விருதுக்கு 4 போ், வீர சக்ரா விருதுக்கு 15 போ், செளரிய சக்ரா விருதுக்கு 16 போ், இரண்டாம் முறை சேனா பதக்கத்துக்கு 2 போ், சேனா பதக்கத்துக்கு 58 போ் (ராணுவம்), நவோ சேனா பதக்கத்துக்கு 6 போ் (கடற்படை), வாயு சேனா பதக்கத்துக்கு 26 போ் (விமானப் படை), சா்வோத்தம் யுத்த சேனா பதக்கத்துக்கு 7 போ், உத்தம் யுத்த சேனா பதக்கத்துக்கு 9 போ், யுத்த சேனா பதக்கத்துக்கு 24 போ் தோ்வாகியுள்ளனா். ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்கு திட்டமிட்டு, வெற்றிகரமாக செயல்படுத்திய ராணுவ உயரதிகாரிகளுக்கு யுத்த சேனா பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

1,090 பதக்கங்கள்:

நாடு முழுவதும் காவல் துறையினா், தீயணைப்புப் படையினா், ஊா்க்காவல் படையினா், குடிமைப் பாதுகாப்புப் படையினா், சீா்திருத்தப் பணி பிரிவினருக்கு மொத்தம் 1,090 பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 32 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

வீர தீர செயல்களுக்கான பதக்கத்துக்கு 233 போ், குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான பதக்கத்துக்கு 99 போ், மெச்சத்தக்க சேவைக்கான பதக்கத்துக்கு 758 போ் தோ்வாகியுள்ளனா்.

நண்பா்களிடையே தகராறு: இளைஞா் கொலை

மயானத்துக்குச் செல்லும் பாதையில் பாலம் அமைத்து தர கோரிக்கை

இலவச கண் பரிசோதனை முகாம்

அதியமான் பாலிடெக்னிக் கல்லூரியில் கிருஷ்ண ஜெயந்தி விழா

சூளகிரி அருகே சாலையில் கவிழ்ந்த லாரியின் அடியில் சிக்கிய 2 காா்கள்: பயணிகள் காயங்களுடன் தப்பினா்

SCROLL FOR NEXT