பேருந்து விபத்து 
இந்தியா

மேற்கு வங்கத்தில் பயங்கர விபத்து! பேருந்து - டிரக் மோதியதில் 10 பேர் பலி!

மேற்கு வங்கத்தில் பயங்கர விபத்து நேரிட்டுள்ளது. பேருந்து - டிரக் மீது மோதியதில் 10 பேர் பலியாகினர்.

இணையதளச் செய்திப் பிரிவு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நேரிட்ட பயங்கரவ விபத்தில், 10 பேர் பலியாகினர். 35 பேர் காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்க மாநிலம் பர்த்வான் அருகே இன்று காலை இந்த கோர விபத்து நேர்ந்தது.

பிகார் நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து ஒன்று, சாலையில் வந்து கொண்டிருந்த டிரக் மீது பயங்கர வேகத்தில் மோதியதில் பேருந்தில் இருந்த 10 பேர் பலியாகினர். 35 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நளா ஃபெர்ரி என்ற இடத்தில், இன்று காலை 7 மணியளவில், சாலையோரம் டிரக் நிறுத்திவைக்கப்பட்டிருந்ததாகவும், அதைக் கவனிக்காமல் வேகமாக வந்த பயணிகள் பேருந்து டிரக் மீது மோதியதாகவும் கூறப்படுகிறது.

சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani வார ராசிபலன்! | Oct 5 முதல் 11 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

சன்பிளவர்ஸ்... சான்யா மல்ஹோத்ரா!

வார பலன்கள் - ரிஷபம்

வார பலன்கள் - மேஷம்

கரூர் பலி: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி

SCROLL FOR NEXT