தில்லியில் ஹுமாயூன் கல்லறை வளாகத்தில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக பலியாகினர்.
தில்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள முகலாய மன்னரான ஹுமாயூனின் கல்லறை வளாகத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் மூன்று பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் உள்பட ஐந்து பேர் பலியாகினர்.
கல்லறை வளாகத்திற்குள் அமைந்துள்ள ஒரு தர்காவில் மேற்கூரை விழுந்த இந்தச் சம்பவத்தில், மேலும் ஏழு பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
சம்பவ இடத்திலிருந்து 11 பேர் மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதற்கட்ட தகவல்களின்படி, பிற்பகல் 3:51 மணியளவில் சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் தில்லி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தன. அதைத் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான ஹுமாயூனின் கல்லறை, தில்லியில் உள்ள ஒரு முக்கியமான சுற்றுலா தலமாகும். இங்கு தினமும் நூற்றுக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் வருகை தருகின்றனர்.
இடிபாடுகளுக்குள் சிக்கிய 11 பேர் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுவர் இடிந்து விழுந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து தெரியவில்லை.
சமீபத்தில் பெய்த பலத்த மழை காரணமாக கல்லறையின் கட்டமைப்பு பலவீனமடைத்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.