இந்திரா காந்தி | பிரதமர் மோடி X
இந்தியா

இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்த மோடி!

இந்திரா காந்தியின் சாதனையை பிரதமர் மோடி முறியடித்தது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

தொடர்ச்சியாக 12 முறை சுதந்திர தின உரையாற்றி இந்திரா காந்தியின் சாதனையை பிரதமர் மோடி முறியடித்துள்ளார்.

நாடு முழுவதும் சுதந்திர நாள் இன்று (ஆக.15) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

தேசியத் தலைநகா் தில்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் 12-ஆவது முறையாக பிரதமர் மோடி, தேசியக் கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

இந்தியாவின் வளர்ச்சி, உள்நாட்டு உற்பத்தி, ஜிஎஸ்டி வரி குறைப்பு, விவசாயிகள் நலன் ஆகியவற்றைப் பற்றி பேசினார். அவர் மொத்தமாக 103 நிமிடங்கள் இன்று உரையாற்றினார். இது பிரதமர் மோடியின் நீண்ட உரையாகும். மோடி, கடந்த 2014-ல் 98 நிமிடங்கள் 2016ல் 96 நிமிடங்கள் பேசியிருந்தார். இன்றைய உரையின் மூலமாக பிரதமர் மோடி, அவரது சாதனையையே முறியடித்துள்ளார்.

மேலும் தொடர்ச்சியாக 12 முறை சுதந்திர தின உரையாற்றி இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்துள்ளார். இந்திரா காந்தி, தான் பிரதமராக இருந்த காலத்தில் 11 முறை சுதந்திர தின உரையாற்றியுள்ளார்.

அதிகபட்சமாக இந்தியாவில் 17 முறை நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பெருமை ஜவாஹர்லால் நேருவைச் சேரும். இந்தியா விடுதலை பெற்ற பிறகு முதல் சுதந்திர தினத்தன்று இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேரு 72 நிமிடங்கள் நீண்ட உரையாற்றினார். 2015 ஆம் ஆண்டு 88 நிமிடங்கள் உரையாற்றி நேருவின் சாதனையை முறியடித்தார் பிரதமர் மோடி.

PM Modi delivers longest speech of 103 minutes; surpasses Indira Gandhi’s record for most consecutive I-Day addresses

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

சென்னையில் இரட்டை மாடி பேருந்துகள் இயக்க நடவடிக்கை

SCROLL FOR NEXT