ஜம்மு - காஷ்மீர் மட்டுமில்லாது வட மாநிலங்களான உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசத்திலும் வெள்ளப்பெருக்கால் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட், ஜம்மு-காஷ்மீா் ஆகிய மூன்று வட இந்திய மாநிலங்களில் அண்மையில் மழை-வெள்ள பாதிப்பால் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
உத்தரகண்ட்டில் தலைநகர் டேராடூனில் உள்ள மாநில அவசரநிலை செயல்பாட்டு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், டேராடூன், பாகேஷ்வர், சாமோலி, சம்பாவாட், பிதோராகர், ருத்ரபிரயாக், தேரி, உத்தர்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதுடன் மாவட்ட ஆட்சியர்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஹிமாசல பிரதேசத்தில் மேகவெடிப்புகளால் பலத்த மழை கொட்டித் தீா்த்து, பெருவெள்ளமும், நிலச்சரிவும் நீடித்து வருகின்றன.
ஹிமாசல பிரதேசத்தில் மண்டி மாவட்டத்தில் இன்று(ஆக. 17) வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மண்டியிலிருந்து குளு செல்லும் வழித்தடத்தில் சண்டீகர் - மணாலி தேசிய நெடுஞ்சாலையில் பனார்சா, டகோலி, நாக்வை ஆகிய பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.