தில்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் ENS
இந்தியா

தில்லியில் அடுத்தடுத்து பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

தில்லியில் அடுத்தடுத்து பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பதற்றம்.

இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியின் துவாரகா பகுதியில் இயங்கி வரும் பள்ளிகளுக்கு இன்று காலை அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளுக்கு தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து, பள்ளியில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. தீவிர சோதனைக்குப் பின் மிரட்டல் வெறும் புரளி என்று தெரிய வந்துள்ளது.

ஒரு பள்ளிக்கு இன்று காலை வந்த தொலைபேசி அழைப்பில், பள்ளிக்குள் சக்திவாய்ந்த வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மற்றொரு பள்ளிக்கு மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில மாதங்களாக தில்லி, பெங்களூர், சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் இயங்கி வரும் பள்ளிகளுக்கு அவ்வப்போது வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விண்ணப்பித்துவிட்டீர்களா..? விமானப்படையில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை!

அரசியலில் களமிறங்கும் சூர்யா? நற்பணி இயக்கம் மறுப்பு!

தவெக மாநாடு: 100 அடி கொடிக் கம்பம் சாய்ந்து கார் சேதம்!

தில்லியில் 3 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது: மூவர் பலி!

தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களைக் கணக்கெடுக்க முடிவு!

SCROLL FOR NEXT