அமைச்சர்கள், முதல்வர்கள் பதவிப்பறிப்பு! அமித் ஷா மீது தூக்கியெறியப்பட்ட மசோதா நகல்கள்!
அமைச்சர்கள், முதல்வர்களின் பதவிப்பறிப்பு மசோதாக்களுக்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு
அமைச்சர்கள், முதல்வர்களின் பதவிப்பறிப்பு மசோதாக்களுக்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 3 மசோதாக்களை முன்மொழிந்தார். அரசியலமைப்பு மசோதா (130ஆவது திருத்தம்), யூனியன் பிரதேசங்களின் அரசு திருத்த மசோதா, ஜம்மு - காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களை அமித் ஷா முன்மொழிந்தார்.
அமைச்சர்கள், முதல்வர்கள், பிரதமரோ தொடர்ச்சியாக 30 நாள்கள்வரையில் காவலில் வைக்கப்பட்டால், 31 ஆவது நாளில் அவர்கள் தன்னிச்சையாகவே பதவிநீக்கம் செய்யப்படுவர் என்ற மசோதாவை அமித் ஷா கூறினார். இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
Advertisement
Advertisement
மசோதாவின் நகல்களை எதிர்க்கட்சிகள் கிழித்ததுடன், அதனை அமித் ஷா அருகே தூக்கியெறிந்தனர்.
மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சியினர், தேர்தல் ஆணையத்தைத் தவறாக பயன்படுத்த முயற்சித்தது தோல்வியடைந்ததால், தற்போது எதிர்க்கட்சிகளைக் குறிவைத்து ஜனநாயகத்தை நசுக்குவதற்கும் மாநில அரசுகளைக் கவிழ்ப்பதற்கும் மற்றொரு உத்தியை அரசு செயல்படுத்துகிறது என்று குற்றம் சாட்டினர்.
இருப்பினும், மசோதாக்களை ஆய்வு செய்ய, அவற்றை ஒரு கூட்டுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று அமித் ஷா தெரிவித்தார்.
பணி நியமன முறைகேடு வழக்கில் முன்னாள் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும், தில்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் முன்னாள் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. அரவிந்த கேஜரிவால், சிறையிலிருந்தவாறே தனது முதல்வர் பொறுப்புகளைக் கவனித்து வந்தார்.
Amit Shah Introduces 'Criminal MPs' Bill, Opposition Throws Paper At Him
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.