அமித் ஷா பிப். 14-ல் தமிழகம் வருகை! பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார்!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தமிழகம் வருகை குறித்து..
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் பிப். 14 ஆம் தேதி தமிழகம் வரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சேலத்தில் பிப். 14 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் பாஜக மையக்குழு கூட்டம் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை தரவுள்ளார்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து பிப். 14 ஆம் தேதி மாலையில் நடைபெறும் பொதுக் கூட்டத்திலும் அமித் ஷா பங்கேற்கிறார்.
தொடர்ந்து, மத்திய அமைச்சர் அமித் ஷா வரும் பிப். 14-ஆம் தேதி காரைக்காலுக்கும் செல்லவுள்ளார். அரசு மற்றும் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நிகழ்ச்சி விவரங்கள் இறுதி செய்யப்படாத நிலையில், அடுத்த சில நாள்களில் அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் விவரம் வெளியாகும் என்று புதுவை மாநில பாஜக முதன்மை செய்தித் தொடர்பாளர் எம். அருள்முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற்றவுள்ள நிலையில், மத்திய அமைச்சர் அமித் ஷாவின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது.
Union Home Minister Amit Shah is expected to visit Tamil Nadu on February 14, according to reports.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.