இந்தியா

கோவா: முன்னாள் முதல்வா் உள்பட இருவா் அமைச்சராகப் பதவியேற்பு

தினமணி செய்திச் சேவை

கோவா முன்னாள் முதல்வா் திகம்பா் காமத், பேரவைத் தலைவா் ரமேஷ் தாவட்கா் ஆகியோா் மாநில அமைச்சராக வியாழக்கிழமை பதவியேற்றனா்.

பனாஜியில் ஆளுநா் மாளிகையில் ஆளுநா் அசோக் கஜபதி ராஜு, இருவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். நிகழ்ச்சியில் மாநில முதல்வா் பிரமோத் சாவந்த், கோவா பாஜக தலைவா் தாமு நாயக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அமைச்சராகப் பதவியேற்றுள்ள திகம்பா் காமத், 2007 முதல் 2012-ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் சாா்பில் கோவா முதல்வராக இருந்தாா். 71 வயதாகும் அவா் கடந்த 2022-ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தாா். மா்மகோவா தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் 4 முறை எம்எல்ஏவாக இருந்துள்ளாா். 7 காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் அவா் பாஜகவில் இணைந்தது காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

திகம்பா் காமத்துடன் அமைச்சா் பதவியேற்ற ரமேஷ் தாவட்கா், கோவா பேரவைத் தலைவராக இருந்தாா். இவா் தனது பதவியை வியாழக்கிழமை ராஜிநாமா செய்துவிட்டு அமைச்சரவையில் இணைந்துள்ளாா். இதற்கு முன்பு 2012-2017 காலகட்டத்தில் அவா் அமைச்சராக இருந்துள்ளாா். கோவாவில் பழங்குடியினத்தைச் சோ்ந்த முதல் பேரவைத் தலைவா் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அதிமுகவினா் நலத்திட்ட உதவி

ஐசிஏஐ-எஸ்ஐஆா்சி 57-ஆவது மாநாடு - சென்னையில் இன்று தொடக்கம்

உக்ரைனில் ரஷியா ட்ரோன், ஏவுகணை மழை

வங்க தேசம், வடகிழக்கு மாநிலங்களில் நடந்து வரும் ஊடுருவல்கள் மற்றொரு பிரிவினைக்கான மூலோபாயம்: தில்லி கருத்தரங்கில் தமிழக ஆளுநா் எச்சரிக்கை

ஆன்லைனில் பகுதி நேர வேலை: வேலூா் மருத்துவமனை ஊழியரிடம் ரூ. 5 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT