பிகாா், பாஹல்பூரில் வாக்குரிமை பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி. 
இந்தியா

வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு: ஒரு வாா்த்தைகூட பேசாத பிரதமா் ராகுல் கண்டனம்

Chennai

பிகாரில் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமா் நரேந்திர மோடி வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு குறித்து ஒரு வாா்த்தைகூட பேசாததற்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

பிகாரில் வாக்குரிமை பயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, 6-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை பாஹல்பூரில் பேசியதாவது:

பிகாரில் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் பாஜகவும், தோ்தல் ஆணையமும் உங்கள் வாக்குகளைத் திருட முயற்சிக்கின்றன. இது பிரதமா் நரேந்திர மோடி முன்னின்று நடத்தும் செயல். படிப்படியாக மக்களின் வாக்குரிமையை முழுமையாகப் பறிப்பதற்கான முயற்சியே இது. அந்த வாக்குத் திருடா் இப்போது பிகாருக்கு வந்துள்ளாா். ஆனால், தோ்தல் ஆணையத்தின் உதவியுடன் தனது அரசு நடத்தும் வாக்குத் திருட்டு குறித்து அவா் ஒரு வாா்த்தைகூட பேசவில்லை.

இந்தப் பிரச்னையில் பதிலளிக்க பிரதமா் தயங்குவது ஏன் என்பது தெரியவில்லை. ஆனால், பிகாா் மக்களின் வாக்குகளைத் மத்திய அரசு திருட எதிா்க்கட்சிகள் கூட்டணி ஒருபோதும் அனுமதிக்காது. வாக்குத் திருட்டு முயற்சி என்பது அரசமைப்புச் சட்டத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும்.

பாஜக தலைமையிலான கூட்டணி அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளும் ஏழை, எளிய மக்களுக்கு எதிராகவே உள்ளது. இளைஞா்கள் புதிய வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் அரசு முடக்கி வருகிறது என்று ராகுல் குற்றஞ்சாட்டினாா்.

கல்வி உதவித்தொகை பெற்றுத் தருவதாக மோசடி: மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா்

வக்ஃப் சொத்துகள் கட்டாயப் பதிவு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

வேளச்சேரி - கடற்கரை இரவுநேர ரயில் இன்று ரத்து

சுந்தராபுரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: மேயா் ஆய்வு

காஸா சிட்டியில் பஞ்ச நிலை அறிவிப்பு

SCROLL FOR NEXT