அனில் அம்பானியால் பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்பிஐ) ரூ. 2,929.05 கோடி இழப்பு ஏற்பட்டதாக அளிக்கப்பட்டுள்ள புகாரின்பேரில், சிபிஐ அதிகாரிகளால் இன்று(ஆக. 23) அனில் அம்பானி இல்லத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை முடிவுற்றது.
ரிலையன்ஸ் கம்யூனிகேசன் லிமிடட்.(ஆர்காம்) நிறுவனத்தின் இயக்குநர் அனில் அம்பானியின் இல்லத்தில் சிபிஐ அதிகாரிகள் குழுக்கள் சோதனை நடத்தின.
முன்னதாக, வங்கி முறைகேடு தொடர்பாக எஸ்பிஐ தரப்பிடமிருந்து அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து. கடந்த வியாழக்கிழமை அனில் அம்பானி மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது.
இந்த நிலையில், மும்பையில் அனில் அம்பானிக்கு சொந்தமான இரு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ரிலையன்ஸ் கம்யூனிகேசன் லிமிடட். அலுவலக வளாகம் முழுவதிலும், அதேபோல, மும்பையின் கஃப்பே பரேட் பகுதியிலுள்ள அனில் அம்பானியின் இல்லத்திலும் இன்று சோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.