மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று(ஆக. 23) ஆலோசனை மேற்கொண்டார்.
குடியரசு துணைத் தலைவா் தோ்தல் செப்.9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக தமிழகத்தைச் சோ்ந்தவரும், மகாராஷ்டிர ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளாா்.
இந்த நிலையில், புது தில்லியில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த சி.பி. ராதாகிருஷ்ணன், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் சந்தித்துப் பேசினார்.
அமித் ஷாவுடன் குடியரசு துணைத் தலைவா் தோ்தல் குறித்து விவாதிக்கப்பட்டதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, நெல்லையில் வெள்ளிக்கிழமை(ஆக. 22) நடைபெற்ற பாஜக பூத் கமிட்டி அளவிலான கூட்டத்தில் பங்கேற்க தமிழக வந்திருந்த அமித் ஷா, சி .பி . ராதாகிருஷ்ணனைப் பற்றி குறிப்பிடுகையில், ‘அவர் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது, தமிழ்நாடு பெருமிதம் கொள்வதற்கானதொரு விஷயம்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் காங்கிரஸ் தலைமையிலான ‘இண்டி’ கூட்டணி வேட்பாளராக தெலங்கானாவைச் சோ்ந்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சுதா்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளாா். இதன்மூலம், தோ்தலில் தென்னிந்தியாவை சோ்ந்த இருவருக்கு இடையே போட்டி உறுதியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.