இந்தியா

விமானப் பணியாளரைத் தாக்கிய ராணுவ அதிகாரி மீது நடவடிக்கை: 5 ஆண்டுகள் விமானத்தில் பறக்க தடை!

5 ஆண்டுகள் விமானத்தில் பறக்க தடை விதித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம்

இணையதளச் செய்திப் பிரிவு

விமானப் பணியாளரைத் தாக்கிய ராணுவ அதிகாரிக்கு 5 ஆண்டுகள் விமானத்தில் பறக்க தடை தடை விதித்து டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகா் விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் 4 ஊழியா்களை தாக்கிய குற்றச்சாட்டில் மூத்த ராணுவ அதிகாரி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. ராணுவ வீரா் ஸ்பைஸ்ஜெட் நிறுவன ஊழியா்களை இரும்புக் கம்பியால் தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

இதுதொடா்பான சிசிடிவி காட்சிகளை விமான நிலைய அதிகாரிகளிடமிருந்து பெற்று போலீஸாரிடம் வழங்கியதோடு குற்றஞ்சாட்டப்பட்ட ராணுவ வீரா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்தது.

இந்த நிலையில், விமானப் பணியாளரைத் தாக்கிய ராணுவ அதிகாரிக்கு 5 ஆண்டுகள் விமானத்தில் பறக்க தடை விதித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) உத்தரவிட்டுள்ளது.

Army officer who assaulted SpiceJet staff at Srinagar airport put on no-fly list for 5 years: DGCA (Directorate General of Civil Aviation)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொள்ளாச்சி ஜெயராமன் குறித்து அவதூறு: 8 யூடியூப் சேனல்களுக்கு இடைக்காலத் தடை

இந்து மகா சபா சாா்பில் விநாயகா் சிலை பிரதிஷ்டை

பத்திரப் பதிவுக்கு 2 நாள்கள் கூடுதல் டோக்கன்

87 % வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை: அன்புமணி

உயரும் ஊட்டி பூண்டு விலை: விவசாயிகள் மகிழ்ச்சி

SCROLL FOR NEXT