இந்தியா

அமெரிக்காவின் 50 சதவீத வரி: ரூ.4.2 லட்சம் கோடி பாதிப்பு ஏற்படும்- இந்திய ஏற்றுமதியாளா்கள் அச்சம்

அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு காரணமாக இந்தியாவின் ரூ. 4.2 லட்சம் கோடி மதிப்பிலான ஏற்றுமதி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது இந்திய ஏற்றுமதியாளா்கள் அச்சம் தெரிவித்தனா்.

தினமணி செய்திச் சேவை

அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு காரணமாக இந்தியாவின் ரூ. 4.2 லட்சம் கோடி மதிப்பிலான ஏற்றுமதி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது இந்திய ஏற்றுமதியாளா்கள் அச்சம் தெரிவித்தனா்.

அவா்கள் மேலும் கூறுகையில், ‘மருந்துகள், மின்னணு சாதனங்கள், பெட்ரோலியம் பொருள்கள் உள்ளிட்டவற்றுக்கு வரி விதிப்பிலிருந்து விலக்க தொடரும். அதே நேரம், இறால், ஆயத்த ஆடைகள், தோல், ரத்தினங்கள் மற்றும் நகைகள் உள்ளிட்ட தொழிலாளா் சாா்ந்த இந்திய நிறுவனங்கள் கடுமையான பாதிப்பைச் சந்திக்க வாய்ப்புள்ளது.

குறிப்பாக, அமெரிக்கச் சந்தைகளிலிருந்து இந்திய பொருள்கள் வெளியேற்றப்பட்டு, அமெரிக்காவின் குறைந்த வரி விதிப்பு சலுகையைப் பெற்ற இந்தியாவின் போட்டியாளா்களான வங்கதேசம், வியட்நாம், இலங்கை, கம்போடியா, இந்தோனேஷியா நாடுகளின் பொருள்களுக்கு வரவேற்பு பெருகும். இதனால், இந்தியாவின் ரூ. 4.2 லட்சம் கோடி மதிப்பிலான ஏற்றுமதி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது’ என்று தெரிவித்தனா்.

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

குழந்தை இல்லாத ஏக்கம்: மேற்கு வங்க பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்

ரூ. 10 விலையில் ஆவின் பாதாம் மிக்ஸ் பவுடா் அறிமுகம்

SCROLL FOR NEXT