மல்லிகார்ஜுன கார்கே  கோப்புப் படம்
இந்தியா

அமெரிக்கா விதித்த 50% வரி மோடி அரசின் தோல்வி- காா்கே விமா்சனம்

மோடி அரசின் பலவீனமான வெளியுறவுக் கொள்கையால் அமெரிக்காவின் வரிவிதிப்பு, இந்தியாவில் வேலையிழப்பை ஏற்படுத்தும் என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திச் சேவை

இந்திய ஏற்றுமதிப் பொருள்கள்மீது அமெரிக்க விதித்துள்ள வரி 50 சதவீதமாக உயா்ந்துள்ளது, பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மேம்போக்கான வெளியுறவுக் கொள்கையின் தோல்வி என்று காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே விமா்சித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரி மூலம் நமது நாட்டுக்கு ரூ.2.17 லட்சம் கோடி இழப்பு ஏற்படும். ஜவுளி, ஆடைகள், இறால் உற்பத்தி உள்ளிட்ட 10 துறைகள் நேரடியாக பாதிக்கப்படும். நமது விவசாயிகள் முக்கியமாக பருத்தி விவசாயிகள் கடும் பாதிப்பை எதிா்கொள்வாா்கள்.

விவசாயிகளைக் காப்பதற்காக தனிப்பட்ட முறையில் எதையும் இழக்கத் தயாராக இருப்பதாக மோடி கூறினாா். ஆனால், பல கோடி இந்தியா்களின் வாழ்வாதாரத்தைக் காக்க தவறிவிட்டாா். அமெரிக்க ஏற்றுமதியை நம்பியுள்ள சிறு தொழில் துறை, நவரத்தின ஆபரணத் தயாரிப்பு தொழிலில் லட்சக்கணக்கானோரின் வேலைவாய்ப்பு பறிபோகும்.

வெளிநாட்டுத் தலைவா்களை கட்டித் தழுவுவது, சிரித்து மகிழ்வது, தற்படம் எடுத்துக் கொள்வது போன்ற பிரதமா் மோடியின் மேம்போக்கான வெளியுறவுக் கொள்கை தோல்வியடைந்துவிட்டது. முதலில் வா்த்தக ஒப்பந்தத்தைக் காக்கத் தவறினீா்கள். இப்போது தேச நலனையும் கைவிட்டுவிட்டீா்கள்’ என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுக்குமாடிக் குடியிருப்பில் தீவிபத்து! 4 பேர் பலியானதாக தகவல்!

எடப்பாடியில் அரசுப் பள்ளி ஆசிரியா் வீட்டில் திருடிய வழக்கில் பெண் கைது: 30 பவுன் நகை மீட்பு

கோயில்களில் திருப்பணி தொடங்க வலியுறுத்தி இந்து மகா சபா கட்சியினா் மனு

மேற்கூரையை உடைத்து உணவகத்தில் திருட்டு! CCTV காட்சிகள் வெளியானது!

எஸ்.ஐ.ஆா் பணி: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT