உச்ச நீதிமன்றம் கோப்புப்படம்.
இந்தியா

மசோதாக்களை ஆளுநர்கள் நிலுவையில் வைப்பதை நியாயப்படுத்த முடியாது: உச்ச நீதிமன்றம்

மசோதாக்கள் மீது ஆளுநர்கள் முடிவெடுக்காமல் இருப்பதை நியாயப்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.

இணையதளச் செய்திப் பிரிவு

புது தில்லி: மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர்களுக்கு அனுப்பப்படும் மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் இருப்பதை நியாயப்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தருக்கிறது.

சட்டப்பேரவைகளில் நிறைவேற்றி மாநில அரசுகளால் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் மசோதாக்கள் மீது மூன்று மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்து கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டிருந்தது.

இவ்வாறு, நீதித்துறை, குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு உத்தரவிட முடியுமா? என விளக்கம் கேட்டு 14 கேள்விகள் அடங்கிய குறிப்பினை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பியிருந்தார்.

இதன் மீது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையின்போது, பாஜக ஆளும் மாநில அரசுகள் சார்பில் வழக்குரைஞர்கள் வாதங்களை முன் வைத்து வந்தனர்.

இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, மாநில அரசுகளால் அனுப்பி வைக்கப்படும் மசோதாக்கள் மீது ஆளுநர்கள் எந்த முடிவும் எடுக்காமல் வைத்திருப்பதை நியாயப்படுத்த முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆளுநர்களிடம் உச்ச நீதிமன்றம் கேள்விகள் கேட்பதில் எந்த தவறும் இல்லை எனவும் மத்திய அரசிடம் நீதிபதிகள் கருத்துக் கூறியிருக்கிறார்கள்.

மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரங்களில் நீதிமன்றம் உத்தரவிடுவது சரியானதா என ஆய்வு செய்ய வேண்டும். ஆளுநர்கள், மாநில அரசு சட்டப்பேரவைகளில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாவுக்கு ஒப்புதல் தரவில்லை எனில் மாநில அரசுகள் வழக்குத் தொடுக்க முடியாது என்றும், மசோதாக்கள் மீது ஏன் முடிவெடுக்கவில்லை என்று ஆளுநர்களிடம் காரணத்தை தெரிவிக்கும்படி உச்ச நீதிமன்றங்கள் கேட்க முடியுமா என்றும் மத்திய அரசு தரப்பில் கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த உள்ள நீதிமன்ற நீதிபதிகள், ஆளுநர்களிடம் உச்ச நீதிமன்றம் கேள்விகள் கேட்பதில் எந்த தவறும் இல்லை என்று பதிலளித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆளுநா் மாளிகை சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

‘ஹெச்1பி’ விசா நடைமுறையில் மீண்டும் மாற்றம்: டிரம்ப் நிர்வாகம் அதிரடி

ரஷியாவின் தாக்குதலில்.. மூழ்கியது உக்ரைனின் மிகப் பெரிய கடற்படைக் கப்பல்!

தெலங்கானா வெள்ளம்: 5 பேர் பலி.. 3 பேர் மாயம்! மீட்புப் பணிகள் தீவிரம்!

"RSS! விஜய் எச்சரிக்கையாக இருப்பார் என நம்புகிறேன்!"; திருமா | செய்திகள்: சில வரிகளில் | 28.08.25

SCROLL FOR NEXT