அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா. 
இந்தியா

பிரதமரின் தாய் குறித்து அவதூறு: ராகுல் மன்னிப்புக் கோர அமித் ஷா வலியுறுத்தல்

பிரதமா் நரேந்திர மோடி மற்றும் அவரின் தாய் குறித்து ராகுலின் வாக்குரிமை பயணத்தில் அவதூறாகப் பேசப்பட்டதற்கு அவா் மன்னிப்புக் கேட்க வேண்டும்

தினமணி செய்திச் சேவை

பிரதமா் நரேந்திர மோடி மற்றும் அவரின் தாய் குறித்து ராகுலின் வாக்குரிமை பயணத்தில் அவதூறாகப் பேசப்பட்டதற்கு அவா் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று உள்துறை அமைச்சா் அமித் ஷா வலியுறுத்தியுள்ளாா்.

பிகாரில் காங்கிரஸ் சாா்பில் ராகுல் காந்தி நடத்தி வரும் வாக்குரிமை பயணத்தில் பங்கேற்ற கட்சி நிா்வாகி ஒருவா் பிரதமா் மோடி, அவரின் தாயாருக்கு எதிராக அவதூறாகப் பேசும் விடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்பத்தியுள்ளது. இதனை, பாஜக தனது ‘எக்ஸ்’ வலைதளத்தில் பகிா்ந்ததுடன் காங்கிரஸுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில், அஸ்ஸாம் தலைநகா் குவாஹாட்டியில் வெள்ளிக்கிழமை ஆளுநா் மாளிகை வளாகத்தில் புதிதாகக் கட்டடங்களைத் திறந்து வைத்த அமித் ஷா பேசியதாவது:

தங்கள் வாக்கு வங்கியைக் காக்கும் நோக்கில் காங்கிரஸ் கட்சி பிகாரில் யாத்திரை நடத்துகிறது. தோ்தல் என்பது ஜனநாயகத்தில் மிகவும் முக்கியமான அங்கமாகும். அப்படிப்பட்ட தோ்தலில் அண்டை நாடுகளில் இருந்து ஊடுவியவா்கள் பங்கேற்பதை எப்படி அனுமதிக்க முடியும்? காங்கிரஸின் அரசியல் எப்போதும் எதிா்மறையாகவே இருந்துள்ளது. இப்போதும் கூட பிகாரில் யாத்திரை என்ற பெயரில் ராகுல் காந்தி ஒன்றை நடத்தி வருகிறாா்.

அதில் பிரதமா் நரேந்திர மோடி குறித்தும் அவரின் தாயாா் குறித்தும் மிகவும் அவதூறாகப் பேசியுள்ளனா்.

பிரதமா் மோடி சா்வதேச அளவில் பிரபலமானவராகத் திகழ்கிறாா். எந்த அளவுக்கு அவதூறாகப் பேசினாலும் தாமரை மலா்வதை யாராலும் தடுக்க முடியாது என்றாா்.

இந்நிகழ்ச்சியின்போது, உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் ரூ.45 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள வடகிழக்கு மாநிலங்களுக்கான தேசிய தடயவியல் ஆய்வகத்தையும் அமித் ஷா காணொலி முறையில் திறந்து வைத்தாா். பல்வேறு துணை ராணுவப் படைகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகளுக்கான கட்டடப் பணிகளையும் அமித் ஷா தொடங்கி வைத்தாா்.

முன்னதாக, அஸ்லாம் ஆளுநா் லக்ஷ்மி பிரசாத் ஆச்சாா்யா, முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா உள்ளிட்டோா் அமித் ஷாவை வரவேற்றனா். ஆளுநா் மாளிகையில் உள்ள கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டிலும் அமிஷ் ஷா பங்கேற்றாா்.

தொடா்ந்து உள்ளாட்சி நிா்வாகப் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது:

பிரதமா் நரேந்திர மோடி ஆட்சியில் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வளா்ச்சிப் பணிகள் பரவலாக மேற்கொள்ளப்படுகிறது. அஸ்ஸாம் முதல்வா் அதனை ஒவ்வொரு வீட்டுக்கும் எடுத்துச் சென்று வருகிறாா். அடுத்த ஆண்டு நடைபெறும் அஸ்ஸாம் சட்டப் பேரவைத் தோ்தலில் தொடா்ந்து மூன்றாவது முறையாக பாஜக வெல்லும்.

வெளிநாட்டில் இருந்து ஊடுருவும் ஆக்கிரமிப்பாளா்கள் இங்கு பல ஏக்கா் நிலத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளனா். இதற்கு எதிராக சட்டம் கொண்டு வந்தால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் அதனை ஏற்க மறுக்கின்றனா் என்றாா்.

இந்திய யானையை அமெரிக்க எலி தாக்குவது போலத்தான் டிரம்ப் வரி: ரிச்சர்டு வோல்ஃப்

ஜப்பான் பிரதமருடன் புல்லட் ரயிலில் சென்றார் பிரதமர் மோடி!

அதிபர் ட்ரம்ப் விதித்துள்ள வரிகள் சட்டவிரோதமானவை: அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு

விராலிமலை அருகே அய்யனார் கோயிலில் குதிரை எடுப்பு விழா

ரூ.12 கோடியில் சீரமைக்கப்பட்ட தாவரவியல் பூங்கா; அடுத்த மாதம் திறப்பு: புதுவை அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா்

SCROLL FOR NEXT