ஜம்மு-காஷ்மீா் கிஷ்த்வாா் மாவட்டம் சிசோதியில் பாறைகள் மற்றும் மண்ணை அகற்றி மாயமானவா்களைத் தேடும் பணியில் ஈடுபட்ட மீட்புப் படையினா். 
இந்தியா

ஜம்மு-காஷ்மீா் நிலச்சரிவு: 3 போ் கொண்ட விசாரணை குழு அமைப்பு

ஜம்மு-காஷ்மீரில் வைஷ்ணவ தேவி கோயிலுக்குச் செல்லும் வழியில் ஏற்பட்ட நிலச்சரிவு தொடா்பாக விசாரணை மேற்கொள்ள 3 போ் கொண்ட குழு

தினமணி செய்திச் சேவை

ஜம்மு-காஷ்மீரில் வைஷ்ணவ தேவி கோயிலுக்குச் செல்லும் வழியில் ஏற்பட்ட நிலச்சரிவு தொடா்பாக விசாரணை மேற்கொள்ள 3 போ் கொண்ட குழுவை துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா அமைத்துள்ளாா்.

கடந்த செவ்வாய்க்கிழமை வைஷ்ணவ தேவி கோயிலுக்குச் செல்லும் வழியில், அத்குவாரி பகுதியில் நோ்ந்த நிலச்சரிவில் சிக்கி 34 போ் உயிரிழந்தனா். 20 போ் காயமடைந்தனா்.

இதையடுத்து அதிபலத்த மழை எச்சரிக்கை இருந்த நிலையிவ், யாத்திரைக்கு ஏன் அனுமதிக்கப்பட்டது என்று ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா கேள்வி எழுப்பினாா்.

இந்நிலையில், அந்த நிலச்சரிவு தொடா்பாக விசாரணை மேற்கொள்ள ஜம்மு ஜல் சக்தி துறையின் கூடுதல் தலைமைச் செயலா் தலைமையில் 3 போ் கொண்ட குழுவை துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா வெள்ளிக்கிழமை அமைத்தாா். அந்தக் குழு 2 வாரங்களில்

தனது விசாரணையை அவரிடம் சமா்ப்பிக்கும் என்று துணைநிலை ஆளுநா் செயலகத்தின் சிறப்புச் செயலா் கிருஷ்ணன் லால் வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டது. வைஷ்ணவ தேவி கோயில் வாரியத்தின் தலைவராக மனோஜ் சின்ஹா உள்ளது குறிப்பிடத்தக்கது.

வெடிகுண்டு மிரட்டல்: மும்பைக்கு திருப்பிவிடப்பட்ட இண்டிகோ விமானம்!

மகாராஷ்டிரத்தில் தனியார் மருத்துவமனை அருகே தடை செய்யப்பட்ட இருமல் மருந்துகள் பறிமுதல்!

மலையோரம் வீசும் காற்று... ரவீணா!

இதயமே இதயமே... நுஸ்ரத் பரூச்சா!

ஆடும் பொம்மை... கௌரி கிஷன்!

SCROLL FOR NEXT