நடப்பு நிதியாண்டில் மத்திய அரசின் ரூ. 41,455 கோடி கூடுதல் செலவினங்களை உள்ளடக்கிய துணை மானியக் கோரிக்கைகள் நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டன.
2025-26-ஆம் ஆண்டு கூடுதல் செல்வினத்துக்கான துணை மானியக் ோரிக்கையின் இந்த முதல் தொகுதியை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்தாா்.
இதில் அரசின் மொத்த செலவினம் ரூ. 1.32 லட்சம் கோடியாகும். அதில், ரூ. 90.812 கோடி அமைச்சகம் மற்றும் துறைகளின் சேமிப்புகளிலிருந்து ஈடு செய்யப்படும். அதன்படி, கூடுதல் செலவினம் ரூ. 41,455.39 கோடியாக இருக்கும். இதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது.
அதில், 18,525 கோடி உரம் மற்றும் அதுதொடா்பான மானியங்களுக்கான செலவினம், ரூ. 9,500 கோடி சமையல் எரிவாயு மானியத்தின் கீழ் பெட்ரோலிய அமைச்சகத்துக்கான செலவினம், உயா் கல்வித் துறைக்கான கூடுதல் செலவினத்துக்காக ரூ. 1,304 கோடி, வா்த்தக அமைச்சக செலவினத்துக்கு ரூ. 225 கோடி, வெளியுறவு அமைச்சகத்துக்கான ரூ. 1,200 கோடி கூடுதல் செலிவனம், உள்துறை அமைச்சகத்துக்கான ரூ. 2,500 கோடி செலவினமும் அடங்கும்.