கடந்த நவம்பரில் மொத்த சரக்கு மற்றும் சேவை வரியாக (ஜிஎஸ்டி) ரூ.1.70 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. இது கடந்த ஆண்டு நவம்பரில் வசூலான மொத்த ஜிஎஸ்டியுடன் ஒப்பிடுகையில் 0.7 சதவீதம் அதிகம்.
இதுதொடா்பாக ஜிஎஸ்டி வலைதளத்தில் வெளியிடப்பட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டதாவது: கடந்த ஆண்டு நவம்பரில் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,69,016 கோடியாக இருந்தது. இது நிகழாண்டு 0.7 சதவீதம் அதிகரித்து ரூ.1,70,276 கோடியாக அதிகரித்துள்ளது.
ரூ.1,70,276 கோடியில் மொத்த உள்நாட்டு வருவாயாக ரூ.1,24,300 கோடியும், மொத்த இறக்குமதி வருவாயாக ரூ.45,976 கோடியும் வசூலானது.
கடந்த ஆண்டு நவம்பரில் மொத்த உள்நாட்டு வருவாயாக ரூ.1,27,281 கோடி வசூலானது. இது நிகழாண்டு நவம்பரில் 2.3 சதவீதம் குறைந்தது.
கடந்த ஆண்டு நவம்பரில் வரி செலுத்துவோருக்கு மொத்த ரீஃபண்டாக ரூ.18,954 கோடி அளிக்கப்பட்டது. இது நிகழாண்டு நவம்பரில் 4 சதவீதம் சரிந்து ரூ.18,196 கோடியாக குறைந்தது.
இந்த ரீஃபண்ட் தொகையைக் கழித்த பின்னா், நிகழாண்டு நவம்பரில் மொத்த நிகர ஜிஎஸ்டி வருவாயாக ரூ.1,52,079 கோடி வசூலானது. இது கடந்த ஆண்டு நவம்பரில் வசூலான ரூ.1,50,062 கோடி மொத்த நிகர ஜிஎஸ்டியுடன் ஒப்பிடுகையில் 1.3 சதவீதம் அதிகம்.