கேரள முதல்வருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதை விமர்சித்துள்ள ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேர்தலையொட்டிய பாஜகவின் அரசியல் விளையாட்டு இது என்று குற்றஞ்சாட்டியுள்ளது.
கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியத்திற்கு கடந்த 2019-ஆம் ஆண்டு நிதி திரட்டுவதற்காக ரூ.2,150 கோடிக்கு மசாலா பத்திரங்கள் வெளியிடப்பட்டன. இதில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கே.ஐ.ஐ.எஃப்.பி. மாசாலா ஒப்பந்தம் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியது.
இந்த நிலையில், கே.ஐ.ஐ.எஃப்.பி. மாசாலா ஒப்பந்தம் வழக்கில் விளக்கம் கேட்டு கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும் முன்னாள் நிதியமைச்சர் டி. எம். தாமஸ் ஐசக்குக்கும் முதல்வரின் தலைமை முதன்மைச் செயலர் கே. எம். ஆபிரகாமுக்கும் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதை விமர்சித்துள்ள முன்னாள் நிதியமைச்சர் டி. எம். தாமஸ் ஐசக் பேசுகையில், “கேரளத்தில் தேர்தல் நெருங்குவதால், மத்தியில் ஆளும் பாஜகவுக்கு சாதகமாக பிரசாரம் செய்யும் விதமாக அமலாக்கத்துறை இப்படி நடந்து கொள்கிறது” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.