பிரதமர் மோடி - கோப்புப்படம் 
இந்தியா

அவைக்குள்ளே அமளி வேண்டாம்! எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி கோரிக்கை

அவைக்குள்ளே அமளி வேண்டாம் என்று எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி கோரிக்கை வைத்துள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

புது தில்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அவைக்குள்ளே அமளி வேண்டாம் என்று எதிர்க்கட்சிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்குகிறது. டிசம்பா் 1 முதல் 19-ஆம் தேதி வரை 15 அமர்வுகள் நடைபெறவிருக்கிறது. பிகாா் சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் நவ.14-ஆம் தேதி வெளியான நிலையில், அதன் பிறகு நடைபெறும் கூட்டத் தொடர் என்பதால், தேர்தல் முடிவுகள் கூட்டத் தொடரில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று காலை நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கவிருக்கும் நிலையில், கூட்டத் தொடரில் பங்கேற்பதற்கு முன்பு நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், நாடாளுமனற் குளிர்கால கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மக்கள் பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சகிள் நாடாளுமன்றத்தில் பேச வேண்டும். எதிர்க்கட்சிகள் தங்கள் அமளியை அவைக்கு வெளியே வைத்துக் கொள்ள வேண்டும். அவைக்குள்ளே அமளி வேண்டாம். இளம் எம்பிக்கள், முதல் முறை எம்பிக்கள் நாடாளுமன்றத்தில்அதிகமாக பேச வேண்டும். அவர்கள் பேச அதிகமாக வாய்ப்பளிக்க வேண்டும்.

பிகார் தேர்தல் தோல்வியை மனதில் கொண்டு நாடாளுமன்றத்தில் பிரச்னையை எழுப்பக் கூடாது. நாட்டின் வளர்ச்சியே முதன்மையானது. கூட்டத் தொடர் சுமூகமாக நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு முக்கியம். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

பிகார் தேர்தல் தோல்வியின் மனச் சோர்வில் இருந்து எதிர்க்கட்சகிள் வெளியே வர வேண்டும். பிகார் மாநில தேர்தல் தோல்வி எதிர்க்கட்சிகளை அமைதியற்றவர்களாக மாற்றியியுள்ளது. வெற்றியின் ஆணவத்தையும் தோல்வியின் விரக்தியையும் அவையில் வெளிப்படுத்தக் கூடாது.

நாட்டுக்காக நாம் செய்ய விரும்பும் விஷயங்களை விவாதிக்கக் கூட்டத் தொடரில் கவனம் செலுத்த வேண்டும். மக்கள் பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் அவையில் பேச வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

Winter session not a ritual; it will fuel efforts to take India towards development: PM Modi ahead of Parliament session.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புயல் வலுவிழந்தாலும் சென்னையில் கனமழை! பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை விடப்படுமா?

முக்கிய பிரச்னையை விட்டுவிட்டு நாடக உரை நிகழ்த்திய மோடி! கார்கே பதிலடி

கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு நாளை விருந்தளிக்கிறார் டி.கே.சிவகுமார்!

ரியோ ராஜ் - 6 பெயர் போஸ்டர்!

விவசாயி மகன், குடியரசு துணைத் தலைவராகியுள்ளார் : சி.பி. ராதாகிருஷ்ணனை வரவேற்று மோடி உரை!

SCROLL FOR NEXT