எஸ்ஐஆா் விவகாரம் குறித்து உடனடியாக விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை PTI
இந்தியா

நாடாளுமன்றத்தில் எஸ்ஐஆர் குறித்து டிச. 9-இல் விவாதம்? மத்திய அரசு பதில்

எஸ்ஐஆர் குறித்து டிச. 9-இல் விவாதம் நடத்த தயாராக இருப்பதாக வெளியான தகவலுக்கு மத்திய அரசு பதில்

இணையதளச் செய்திப் பிரிவு

புது தில்லி: வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அரசு தயாராக இருப்பதாக வெளியான தகவலுக்கு மத்திய அரசு தரப்பிலிருந்து பதில் அளிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் திங்கள்கிழமை(டிச. 1) தொடங்கிய நிலையில், எஸ்ஐஆா் விவகாரம் குறித்து உடனடியாக விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளதால் இரு நாள்களாக இரு அவைகளும் முடங்கின. இதையடுத்து, எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று எஸ்ஐஆர் விவகாரம் குறித்து விவாதம் நடத்த அரசு தயாராக இருப்பதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை(டிச. 2) தெரிவித்திருப்பதாவது:

“எஸ்ஐஆர் குறித்து எந்தவொரு விவாதமும் நடத்த வாய்ப்பில்லை. இவ்விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டால் நாங்கள் (அரசு) எங்கள் மசோதாக்களை தாக்கல் செய்வதைத் தொடருவோம். எனினும், தேர்தல் சீர்திருத்தங்கள் விவகாரம் குறித்து டிச. 9-இல் விரிவான விவாதம் நடத்த அரசு தயாராக இருக்கிறது” என்று தகவலறிந்த மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Centre is prepared to hold a broader discussion on electoral reforms on December 9.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வழக்கமான லுக் இல்லைதான்... வினுஷா தேவி!

நவரத்னா அந்தஸ்தை பெற்ற நுமாலிகர் ரிஃபைனரி!

எந்தெந்த மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

உன் காதலில் நான் வாழ்ந்தேன்... க்ரித்தி சனோன்!

ஆயிரத்தில் அவள் ஒருத்தி... ஜீவிதா!

SCROLL FOR NEXT