கோப்புப் படம் 
இந்தியா

கருப்புப் பணமா? அப்படி ஒன்று இல்லவே இல்லையே!

கடந்த 10 ஆண்டுகளில் நாட்டிலிருந்து எவ்வளவு கருப்புப் பணம் மீட்கப்பட்டுள்ளது என்பது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ தரவுகளும் இல்லை என மத்திய நிதியமைச்சகம் பதில்.

இணையதளச் செய்திப் பிரிவு

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து எவ்வளவு கருப்புப் பணம் மீட்கப்பட்டுள்ளது என்பது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ தரவுகளும் இல்லை என மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

குளிர்கால கூட்டத்தொடர் திங்கள் கிழமை (டிச. 1) முதல் நடைபெற்று வரும் நிலையில், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மாலா ராய், கருப்புப் பணம் மீட்பு குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பினார்.

2015 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் வெளிநாட்டில் மீட்கப்பட்ட கருப்புப் பணத்தின் மதிப்பு எவ்வளவு? இதே காலகட்டத்தில் நாட்டில் இருந்து வெளிநாட்டிற்கு கொண்டுசெல்லப்பட்ட கருப்புப் பணத்தின் மதிப்பு எவ்வளவு? எனக் கேள்வி எழுப்பினார்.

இக்கேள்விக்கு நிதித் துறை இணை அமைச்சர் பங்கஜ் செளத்ரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

''வருமான வரிச் சட்டம் 1961-ல் கருப்புப் பணம் என்ற சொல் இல்லை. வெளியிடப்படாத வெளிநாட்டு வருவாய் மற்றும் சொத்துகளைக் கண்டறிவதை அல்லது கருப்புப் பணத்தை கருப்புப் பண தடுப்புச் சட்டம் 2015 வரையறை செய்கிறது.

2015 ஜூலை 1 முதல் கருப்புப் பண தடுப்புச் சட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது. ஜூலை 1 முதல் செப்டம்பர் 30 வரையிலான காலகட்டத்தில் ரூ. 4,164 கோடி மதிப்புடைய வெளிநாட்டு பணம் மற்றும் சொத்துகள் தொடர்பான 684 ரகசிய தகவல்களை மத்திய அரசு பெற்றது. இதற்கு அபராதமாகவும் வரியாகவும் மொத்தமாக ரூ. 2,476 கோடி வசூலிக்கப்பட்டது.

2015 முதல் 2025 ஜூன் வரையிலான 10 ஆண்டு காலகட்டத்தில் கருப்புப் பண தடுப்புச் சட்டத்தின் கீழ் 1,087 மதிப்பீடுகள் வருமான வரித் துறை தரப்பில் செய்யப்பட்டுள்ளது. அவற்றின் அபராதம் மற்றும் வரி மதிப்பு ரூ. 40,564 கோடி'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், உள்நாட்டில் எவ்வளவு கருப்புப் பணம் மீட்கப்பட்டது என்பது குறித்த ஆண்டு வாரியான எந்தவொரு தரவுகளும் இல்லை என்றும், வெளிநாட்டில் இருந்து கருப்புப் பணம் மீட்டு கொண்டுவரப்பட்டதற்கான தனிப்பட்ட தரவுகளும் இல்லை எனவும் அறிக்கையில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | வில்லங்கமானதா சஞ்சாா் சாத்தி செயலி? முழு விவரம்...!

No Official Estimate Of Black Money Taken Out Of India In Last 10 Years Govt Says

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொன் என்பேன் சிறு பூவென்பேன்... மிருணாள் தாக்குர்!

பாமக தலைவராக அன்புமணி: தேர்தல் ஆணைய உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டிச. 4 ஆர்ப்பாட்டம் - ராமதாஸ்

எல்லாவற்றையும் விளக்க முடியாது, உணர வேண்டும்... இஷா ரிக்கி!

இனி 2 மாத அட்வான்ஸ் போதும்! ... வீட்டு வாடகை விதிமுறைகள் சட்டத்தின் சிறப்புகள் என்ன?

நிலா அது மாடியின் மேலே... ரச்சிதா மகாலட்சுமி!

SCROLL FOR NEXT