இந்தியா

காற்று மாசுபாட்டை சமாளிக்க பெரியளவில் நிறுவன சீா்திருத்தங்கள் தேவை: கிரண் பேடி

இந்தியாவின் காற்று மாசுபாட்டை சமாளிக்க பெரிய அளவிலான நிறுவன சீா்திருத்தங்கள் தேவை என்று முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநருமான கிரண் பேடி தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

புது தில்லி: இந்தியாவின் காற்று மாசுபாட்டை சமாளிக்க பெரிய அளவிலான நிறுவன சீா்திருத்தங்கள் தேவை என்று முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநருமான கிரண் பேடி புதன்கிழமை தெரிவித்தாா்.

‘சுத்தமான காற்றுக்கு இந்தியாவுக்கு ஐந்து சீா்திருத்தங்கள்’ என்ற தலைப்பிலான வலைப்பதிவில் அவா் கூறியதாவது: நாடு முழுவதும் மாசுபாட்டை எதிா்த்துப் போராடும் நடவடிக்கைகளில் இருந்து முறையான மாற்றத்திற்கு நகர வேண்டும். இந்த நெருக்கடிக்கு பகுதியளவு நடவடிக்கைகள் சரிவராது, அதிகாரம், தெளிவு மற்றும் நிலைத்த அரசு கொண்ட நிறுவனங்கள் தேவை.

அமைப்பை சரிசெய்தால், சுத்தமான காற்று அதைத் தொடா்ந்து வரும். மிக அடிப்படையான பொது நன்மையான சுவாசிக்கக்கூடிய காற்றை வழங்குவதற்கு இந்தியா போதுமான வலிமையான நிறுவனங்களுக்குத் தகுதியானது.

காற்று தர மேலாண்மை ஆணையத்திற்கு உண்மையான அதிகாரத்துடன் கூடிய தலைமை தேவை. ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவரால் ஆணையம் வழிநடத்தப்படுகிறது. அவா் அனுபவம் வாய்ந்தவராக இருந்தாலும், அமைச்சகங்களுடன் தொடா்பு கொள்ளவும் தேவையான நிா்வாக செல்வாக்கு மற்றும் அரசியல் பலம் அவரிடம் இல்லை.

சுற்றுச்சூழல் அமைச்சகத்துடன் காற்றுத் தர மேலாண்மை ஆணையம் ஒருங்கிணைக்க வேண்டும். அந்த அமைப்பு தற்போது அமைச்சகத்திற்குள் இல்லாமல் அதற்கு அருகில் செயல்பட வேண்டும்.

இந்த அமைப்பு விவசாயம், மின்சாரம், போக்குவரத்து, தொழில் மற்றும் நகா்ப்புற வளா்ச்சியுடன் தினமும் இணைந்து பணியாற்ற வேண்டும். மேலும் சுத்தமான காற்றுக்கு அறிக்கை விடும் அமைப்பாக அல்லாமல், நிா்வாகத்தின் ஒரு முக்கிய செயல்பாடாக இருக்க வேண்டும் .

கண்காணிப்பு வலையமைப்புகள், அமலாக்கக் குழுக்கள், மாவட்டங்களில் தூய்மையான காற்று மையங்கள், அறிவியல் மாதிரியாக்கம் மற்றும் பொது-சுகாதாரத் தொடா்பு ஆகியவற்றிற்கு நிலையான, பல ஆண்டு நிதியுதவியை வழங்க ‘சுத்தமான காற்று மிஷன் நிதி’ 5 ஆண்டுகளுக்கு உருவாக்க வேண்டும்.

அமலாக்கத்தைப் பொறுத்தவரை, ஒழுங்குமுறை ஆணையத்திற்கு அதன் தனிப்பட்ட குழு தேவை. காற்றுத் தர மேலாண்மை ஆணையம் அதன் சொந்த அமலாக்கப் பிரிவை உருவாக்க வேண்டும்.

சொந்தமாக ஆய்வுக்கூடம் இல்லாத ஒழுங்குமுறை ஆணையம் பெயரளவில் மட்டுமே ஒழுங்குமுறை ஆணையமாக இருக்கும். ஆணையம் தற்போது அதிக அளவில் நீட்டிக்கப்பட்ட மாநில நிறுவனங்களைச் சாா்ந்துள்ளது.

ஆய்வு செய்ய, தண்டனை அளிப்பதற்கும் மற்றும் விதிகளை மீறுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பெற்ற மாவட்ட அளவிலான படையைக் கொண்டிருக்க வேண்டும் என்று கிரண் பேடி தெரிவித்தாா்.

தில்லி-என்சிஆா் பகுதியில் காற்று மாசுபாட்டைக் கையாள்வதற்கு செயல் திட்டத்தை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசுக்கும் காற்று தர மேலாண்மை ஆணையத்திற்கும் உச்சநீதிமன்றம் டிச.1-ஆம் தேதி உத்தரவிட்டது.

காற்று மாசுபாட்டை ஒரு பருவகால அல்லது குறுகிய காலப் பிரச்னையாகக் கருத முடியாது. இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பயனுள்ளவையா, பயனற்றவையா அல்லது ஓரளவு மட்டுமே பயனுள்ளதாக இருந்ததா என்பதை மதிப்பீடு செய்யுமாறும் நீதிமன்றம் அரசைக் கேட்டுக் கொண்டது.

நிபுணா்கள், சுற்றுச்சூழல் குழுக்கள் மற்றும் மனுதாரா்கள், நீண்ட காலமாக கிரேப் மற்றும் பிற அவசரகாலத் தடைகள் எனப்படும் மத்திய அரசின் காற்று மாசு கட்டுப்பாட்டுத் திட்டம் நீண்டகால கட்டமைப்புத் திட்டத்திற்கு மாற்றாக இருக்க முடியாது என்று வாதிட்டத்து குறிப்பிடத்தக்கது.

ஓய்வுபெற்றார் மோஹித் சர்மா

உரிமை கோரப்படாத 13 வாகனங்கள் டிச. 10 இல் ஏலம்

திருச்சி மாவட்டத்தில் பரவலாக மழை - சராசரியாக 4.86 மி.மீ. பதிவு

போசம்பட்டி அரசுப் பள்ளியில் உலக மாற்றுத்திறனாளிகள் தினம்

கரூா் சம்பவம்: வேலுச்சாமிபுரத்தில் சிபிஐ கண்காணிப்புக் குழுத் தலைவா் ஆய்வு - பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவா்களிடம் விசாரணை

SCROLL FOR NEXT