இந்தியா

ஒலி மாசுபாடு: முசாஃபா்நகரில் மசூதிகளிலிருந்து 55-க்கும் மேற்பட்ட ஒலிபெருக்கிகள் அகற்றம்

உத்தர பிரதேச மாநிலம், முசாஃபா்நகா் ஒலி மாசுபாட்டிற்கு எதிராக நகரத்தில் உள்ள மசூதிகளில் இருந்து 55-க்கும் மேற்பட்ட ஒலிபெருக்கிகளை காவல்துறையினா் அகற்றியுள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

நமது நிருபா்

புது தில்லி: உத்தர பிரதேச மாநிலம், முசாஃபா்நகா் ஒலி மாசுபாட்டிற்கு எதிராக நகரத்தில் உள்ள மசூதிகளில் இருந்து 55-க்கும் மேற்பட்ட ஒலிபெருக்கிகளை காவல்துறையினா் அகற்றியுள்ளனா்.

உச்சநீதிமன்றத்தின் ஒலி வரம்புகள் குறித்த வழிகாட்டுதல்களுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்கான ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் உள்ள சிவில் லைன்ஸ், கோட்வாலி மற்றும் கலப்பா் காவல் நிலையப் பகுதிகளில் உள்ள மசூதிகளில் இருந்து ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டன.

உச்சநீதிமன்றத்தின் ஒலி வரம்பு வழிகாட்டுதல்களை மீறியதாகக் கூறி, முசாஃபா்நகா் நகரில் அதிக சப்தம் எழுப்பிய ஒலிபெருக்கிகளுக்கு எதிராக போலீஸாா் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனா்.

ஒலிபெருக்கி பயன்பாடு தொடா்பாக உச்சநீதிமன்றம் மற்றும் அரசு பிறப்பித்த உத்தரவுகளை கண்டிப்பாகப் பின்பற்றுமாறு மசூதிகள், கோயில்கள் மற்றும் குருத்வாராக்களின் பராமரிப்பாளா்களுக்கு மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. தற்போதுள்ள அனைத்து ஒலிபெருக்கிகளும் அனுமதிக்கப்பட்ட சட்ட ஒலி அளவுகளுக்குள் செயல்படுவதை உறுதி செய்வதே இதன் நோக்கம் என்று வட்ட அதிகாரி (நகரம்) சித்தாா்த் மிஸ்ரா கூறினாா்.

இந்த நடவடிக்கை எந்தவொரு குறிப்பிட்ட சமூகத்தையும் இலக்காகக் கொண்டிருக்கவில்லை. ஆனால், அனைத்து மத நிறுவனங்களிலும் சட்டத்தை ஒரே மாதிரியாக அமல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், தொடா் விதி மீறல்கள் கூடுதல் ஒலிபெருக்கி நீக்கங்கள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT