நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல்காந்தி PTI
இந்தியா

ரஷிய அதிபர் புதினை சந்திக்க ராகுல் காந்திக்கு அனுமதி மறுப்பு!

வெளிநாட்டு தலைவர்களை சந்திக்க தடைவிதித்தது பற்றி..

இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியாவிற்கு வருகைதரும் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை சந்திக்க தனக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகக் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் இரண்டு நாள் பயணமாக இன்று மாலை இந்தியா வருகிறார். (டிச. 5) காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் புதினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிதது குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வரவேற்கவுள்ளார்.

பின்னர், காலை 11.30 மணிக்கு அதிபர் புதின், இந்தியத் தலைவர்களின் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தவுள்ளார். காலை 11.50 மணியளவில் ஹைதராபாத் இல்லத்துக்குச் செல்லும் புதினை பிரதமர் மோடி வரவேற்கிறார். அங்கு இரு தலைவர்கள், இரு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் 23-ஆவது ஆண்டு மாநாடு நடைபெற உள்ளது.

இந்த நிலையில், அதிபர் புதினை சந்திக்க எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

வெளிநாட்டுத் தலைவர்களை எதிர்க்கட்சி தலைவர்கள் சந்தித்துப் பேசுவது மரபாக இருந்து வந்தது. முன்னாள் பிரதமர்கள் வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆட்சிக் காலங்களிலும் இது கடைப்பிடிக்கப்பட்டது.

ஆனால், தற்போது வெளிநாட்டுத் தலைவர்கள் இந்தியாவுக்கு வருகை தரும்போதும் அல்லது நான் வெளிநாடு செல்லும்போதும், எதிர்க்கட்சித் தலைவரைச் சந்திக்க வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்துகிறது. அரசு மட்டுமே இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை. நாங்கள் இணைந்துதான்.

எதிர்க்கட்சித் தலைவர்கள் வெளிநாட்டுத் தலைவர்களைச் சந்திப்பதை அரசு விரும்புவதில்லை. இந்தியா வருகை தரும் வெளிநாட்டுத் தலைவர்களை, பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சகமும் எதிர்க்கட்சிகளிடமிருந்து விலக்கியே வைத்துள்ளது. இதற்கு போதிய பாதுகாப்பின்மையே காரணம் இவ்வாறு அவர் கூறினார்.

Congress leader Rahul Gandhi on Thursday alleged that the government tells visiting foreign dignitaries not to meet the Leader of the Opposition due to its "insecurity".

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“ரகசிய சந்திப்பு இல்லை! நேரடி சந்திப்புதான்!” நயினார் நாகேந்திரன் பேட்டி

புதினை சந்திக்க அனுமதி மறுப்பு? மத்திய அரசுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் வித்தியாசமான படங்கள்!

5 முதல்வர்கள், 66 ஆண்டுகள்... தமிழ்த் திரைமுகம் ஏவிஎம் சரவணன்!

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவு சரியே! - திருப்பரங்குன்றம் வழக்கில் மதுரைக் கிளை உத்தரவு

SCROLL FOR NEXT