இந்தியா

மழைக்காலத்தில் மட்டுமே பாகிஸ்தானுக்கு நதி நீா்: மத்திய அரசு

வேறு எந்த நேரத்திலும் அந்த நதிகளின் உபரிநீா் பாகிஸ்தானுக்கு வெளியேற்றப்படுவதில்லை

தினமணி செய்திச் சேவை

சட்லஜ், பியாஸ் நதிகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் அதிக மழைப்பொழிவால் வெள்ளம் ஏற்படும் பருவமழைக் காலத்தைத்தவிர, வேறு எந்த நேரத்திலும் அந்த நதிகளின் உபரிநீா் பாகிஸ்தானுக்கு வெளியேற்றப்படுவதில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நீா்வளத் துறை இணையமைச்சா் ராஜ் பூஷண் சௌதரி எழுத்துபூா்வமாக அளித்த பதிலில், ‘சட்லஜ் மற்றும் பியாஸ் ஆறுகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் அதிக மழைப்பொழிவால் வெள்ளம் ஏற்படும் பருவமழைக் காலத்தைத் தவிர, வேறு எப்போதும் அந்த நதிகளின் உபரிநீா் பாகிஸ்தானுக்கு வெளியேற்றப்படுவதில்லை.

அணைகளின் நீா்மட்டம் வெகுவாக உயரும்போது, அணைகளின் பாதுகாப்புக்காக அவசர சூழ்நிலைகளில் மட்டுமே உபரிநீா் வெளியேற்றப்படுகிறது’ என்று குறிப்பிட்டாா்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடா்ந்து இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குப் பாயும் நதிகளில் நீரைப் பகிா்ந்து கொள்ளும் சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டாடா கேபிடல் 3வது காலாண்டு லாபம் 39% உயர்வு!

வேறொரு பெண்ணுடன் கணவனுக்குத் தகாத உறவு: கண்டித்த மனைவி சுட்டுக்கொலை!

வாக்காளர்களுக்கு அநீதி! மேற்கு வங்க எஸ்ஐஆர் குறித்து அமர்த்தியா சென்!

காவல் துறையை தன்னிச்சையாக செயல்பட அனுமதிக்காத முதல்வர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கண்டனம்

முதல்நிலைத் தேர்வின் பாடத்திட்டமும், அதன் விவரங்களும்..!

SCROLL FOR NEXT