விமான நிலையங்கள் 
இந்தியா

தில்லி, மும்பையிலிருந்து 200க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து!

தில்லி, மும்பையிலிருந்து 200க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இணையதளச் செய்திப் பிரிவு

புது தில்லி, மும்பை நகரங்களில் உள்ள விமான நிலையங்களிலிருந்து சனிக்கிழமை காலை 200க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

விமானிகள் உள்ளிட்ட விமான சேவை வழங்கும் பணியாளர்களுக்கான புதிய விதிமுறைகளில் தளர்வு வழங்கப்பட்டிருக்கும் நிலையில், உள்நாட்டு விமான நிறுவனமான இண்டிகோ சனிக்கிழமை தில்லி மற்றும் மும்பையிலிருந்து 200 க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரத்து செய்யப்பட்ட இந்த விமானங்களில், மும்பை விமான நிலையத்தில் ஒட்டுமொத்தமாக 109 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதில், விமான நிலையம் வரும் 51 விமானங்களும் 58 புறப்படும் விமானங்களும் அடங்கும். அதுபோல, தில்லி விமான நிலையத்தில் இருந்து புறப்படும் 54 விமானங்களும், வந்து சேரும் 52 விமானங்களும் உள்பட 106 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

வெள்ளிக்கிழமை மட்டும், நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் 1000க்கும் மேற்பட்ட விமானங்களை இண்டிகோ விமான சேவை நிறுவனம் ரத்து செய்திருந்தது. கடந்த ஐந்து நாள்களாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டு மிக மோசமான நிலையை எட்டியிருந்த நிலையில், நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீய்டர் எல்பெர்ஸ், விடியோ மூலம் மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

இண்டிகோ விமான சேவையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்ட நிலையில் விமானிகள் மற்றும் விமான ஊழியர்களுக்கான புதிய ஓய்வுவிதிகளை நிறுத்திவைப்பதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்(டிஜிசிஏ) நேற்று அறிவித்திருந்தது.

இந்த நிலையில், இன்றும் இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவை ரத்து தொடர்கிறது. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களில் காத்துக் கிடக்கிறார்கள்.

Domestic carrier IndiGo has cancelled over 200 flights from Delhi and Mumbai on Saturday,

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெட்டிக்கடையில் மதுவிற்ற தாய், மகன் கைது

வாப்ஸோ மாநில செஸ் போட்டி: ஃபெமில், தியா, ஷண்மதி முதலிடம்

பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவா் குண்டா் சட்டத்தில் கைது

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் மலைக்கோயில் 1,300 படிகளில் யோகாசனம் செய்து சிறுமி சாதனை

மல்லசமுத்திரத்தில் இருதரப்பினா் கைகலப்பு: 11 போ் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT